செய்திகள்

மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷியா

மரியுபோல், ஏப். 21–

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மரியுபோலில் உள்ள உருக்காலையைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம் என்று ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை கைப்பற்றியதாக ரஷிய பாதுகாப்புத் துறை அறிவித்திருப்பதை அடுத்து, மரியுபோல் நகருக்கு ஒரு புதிய சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார்.

மரியுபோலை கைப்பற்றியதற்காக ரஷிய ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மரியுபோல் நகரில் உள்ள இரும்பு உருக்காலை மீது தாக்குதல் நடத்தாமல், அதனை கைப்பற்றுமாறு ரஷிய படைகளுக்கு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.