சிறுகதை

மரியாதை | ராஜா செல்லமுத்து

அந்தி கருக்கும் ஒரு மாலை நேரம்…..

வரதன் தன் நண்பர் கருப்பனுடன் பழமுதிர்ச் சோலையில் அமர்ந்திருந்தார்.

அது ஒரு பழமுதிர்ச்சோலை மட்டுமல்ல. காபி டீ கொடுக்கும் இடமாகவும் இருந்தது. கடையின் முன்னால் பழங்களின் அணிவகுப்பு அழகாக காட்சியளித்தது. வலதுபுறம் பழங்கள் அடுக்கப்பட்ட இடமாகவும் இடதுபுறம் ஆட்கள் அமரும் இடமும் இருந்தது .

அந்தக் கடை நவீன காலத்து அழகியல் உணர்ச்சியுடன் அவ்வளவு அழகாக செதுக்கப்பட்டிருந்தது. இரண்டு பக்கம் அமர்ந்து சாப்பிடும் டேபிள் சேரில் ஒரே நேரத்தில் 30 முதல் 40 ஆட்கள் வரை அமர்ந்து சாப்பிடும் இடமாக அந்த பழமுதிர்ச் சோலை காட்சியளித்தது.

பழமுதிர் சோலையில் பழச்சாறு அருந்தாமல் வரதன் கருப்பன்

சூடான காபி ஆர்டர் கொடுத்துவிட்டு அது வரும்வரையில் தன் சொந்தக்கதை, சோகக்கதை உலகக் கதை உன்னதக் கதை என்று அத்தனை கதைகளையும் விலாவாரியாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘‘கருப்பா வானம் ஒரு மாதிரி இருக்கல்ல’’ என்றார் வரதன்.

அப்படித்தான் இருக்கு வானம் மழை வரும் போல “என்றார் கருப்பன்.

மற்ற ஆட்களுக்கு பழச்சாறு காபி டீ கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அந்த பழமுதிர்ச்சோலை கடைக்காரர்கள்.

கருப்பன் எதிரில் இருந்த சீட்டில் இரண்டு பெண்கள் கருப்பனைப் பார்த்தபடியே இருந்தார்கள்.

அதில் ஒரு பெண் செல்பேசியை எடுத்து சிரிப்பதும் பேசுவதும் பேசுவதும் சிரிப்பதும் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

அருகில் இருப்பவர் செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எதுவும் பேசவில்லை.

இன்னொரு பெண் மட்டும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டே இருந்தாள். அது என்னவென்று புரியாத கருப்பன் அவளை ரொம்ப நேரமாக பார்த்து கொண்டே இருந்தார். அவளின் செய்கை அவருக்கு ஒரு மாதிரியாகப்பட்டது. அதைத் தன் நண்பரிடம் சொன்னார்.

பாத்தீர்களா? நாம இவ்வளவு ஆளுக உட்கார்ந்திருக்கிறோம், கொஞ்சம் கூட மரியாதை இல்லாம ஒரு பொண்ணு எவ்வளவு அநாகரிகமாக பேசிக்கிட்டு இருக்கு பாருஙக” என்று கருப்பன் சொன்னபோது ,அந்த பெண்ணின் பேச்சைக் அந்தக் கடையில் இருந்தவர்கள் பார்க்கத் தவறவில்லை.

அந்தப் பெண்ணின் பேச்சு தவறு என்று தெரிந்தது. ஆனால் யாரும் எழுந்து போய் கொஞ்சம் அமைதியாகப் பேசுங்கள் என்று இல்லை ஒரு பெண் இவ்வளவு பேசக்கூடாது என்றோ யாரும் அவளைத் தட்டி கேட்கவில்லை .

மேலும் அவளின் பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த பழமுதிர்ச் சோலைக்குள் தடபுடலாக நான்கைந்து இளைஞர்கள் வந்தார்கள்.

வந்தவர்களில் ஒருவர் ஹர்ஷவர்த்தன் அருகில் இருக்கும் சேரை அவரிடம் அனுமதி பெறாமலே தூக்கி சென்றான். மீதம் இருந்த சேரில் அந்த இளைஞர்கள் அமர, மேலும் அந்த இடத்தில் சத்தம் அதிகமானது.

யாரோ ஒருவன் அந்த பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல…

அந்தப் பெண்ணும் நன்றியோடு சரி என்றாள்.

அந்த இளைஞர் கூட்டம் பிறந்தநாளுக்காக கூடி இருப்பது கருப்பனுக்கும் பின்னால் தெரிய வந்தது.

அந்த நான்கைந்து இளைஞர்கள் சுற்றி இருப்பவர்களை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் அவர்கள் பாட்டுக்கு லூட்டி அடித்துக் கொண்டும் அடாவடியாக பேசிக் கொண்டும் இருந்தார்கள்.

அங்கிருக்கும் மற்றவர்கள் முகம் சுளித்தார்களே தவிர,

யாரும் அதை ஏன்? என்று கேட்கவில்லை.

அவரவர் டீ குடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வெளியே எழுந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதில் கருப்பனுக்கு சட்டென கோபம் வந்தது.

வரதன் உன் பக்கத்துல இருந்து சேர – ஒரு அனுமதி கேட்காமல் கூட அந்த பையன் எடுத்துட்டு போய் உட்காருறான். அது எவ்வளவு பெரிய தவறு .சரி அந்த சேர்ல ஏற்கனவே நம்ம பிரண்ட் உட்கார்ந்து இருக்கலாம். அவங்க வெளியே சிகரெட் குடிக்க போய் இருக்கலாம். இல்ல வெளிய போய் இருக்கலாம். அவனுக்கு தெரியுமா? இந்த சேர்ல ஆளில்லை அப்படிங்கிறது. ஒரு அனுமதி கேட்காமலேயே இந்த மாதிரி எடுத்துட்டு போறான். இவனுக மனுசங்களா ? அறிவே இல்லையா என்று கருப்பன் திட்டினார்.

வரதன் அதற்கு பதில் சொல்லாமல் இருந்தார்”

நம்ம ஜெனரேஷன் நம்ம தலைமுறை ஆட்கள் அப்படிங்கறது வேற. நானும் நீங்களும் இந்தக் கடைக்கு வந்தோம் .

இவனுக பாருங்க என்னன்னு ஒரு வார்த்தை கூட கேட்காம சேரை எடுத்துப் போட்டு ….என்ன நாகரிகம்? கொதித்துப் போய் பேசினார் கருப்பன் .

அதற்கு வரதன் அமைதியாகவே இருந்தார்.

இப்ப என்ன நடந்துச்சுன்னு இவ்வளவு கொதிக்கிற? என்று ஹர்ஷவர்தன் கூலாக பதில் சொல்ல ,

இல்ல வரதன்… இது எனக்குத் தோணுச்சு. உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். இந்த சேர எடுத்துக் கொள்ளலாமா? அப்படின்னு கேட்டு எடுக்கிறதில அவனுக்கு என்ன குறைந்து போயிரும்? எவ்ளோ அநாகரிகமான ஒரு செயல் என்று மேலும் சொல்ல

அப்படி இல்லங்க கருப்பன் இந்த காலத்து பசங்க எல்லாம் அப்படித்தான் இருப்பாங்க. இத நம்ம பெருசா எடுத்துக்கக் கூடாது. அப்படியே பெருசா எடுத்த முன்னா இந்த தலைமுறை கூட வாழத் தகுதி இல்லாதவர்களாக ஒதிக்கி வச்சிருவாங்க…. நமக்கு முன்னாடி இருக்கிற தலைமுறைக்கு நம்மளப் பிடிக்காது. நமக்கு நமக்கு கீழே உள்ளவங்கள பிடிக்காது.. ஏதோ ஒரு வகையில தலைமுறை இடைவெளி இருந்து கொண்டுதான் இருக்கிறது.

…நல்லதோ கெட்டதோ…. அது நம்ம கண்டுக்க கூடாது….. இந்த பையன் பண்ண தப்பு எனக்கு பெருசா தோணல…. இனி வர்றவங்க கிட்ட நீ அதை எதிர்பார்க்க முடியாது. நம்மள டிஸ்டர்ப் பண்ணாம இருக்காம இருந்தா அதுவே போதும் .. நம்ம ஒதுங்கி இருக்கணும். அதான் புத்திசாலித்தனம் கருப்பா” என்றார். அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இல்ல வரதன் இந்த காலத்து பசங்க எல்லாம் ரொம்ப மோசமா இருக்காங்க. ….யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை .தான்தான் பெரிய அறிவாளி என்ற நினைப்பு,

அது தப்பு நம்ம மாதிரி நடுத்தர வயசு உள்ளவங்க பெரியவங்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோம். எவ்வளவு சரியா நடந்துக்கிறோம். அந்த மரியாதையோ சரியா நடந்துக்கிறதோ…., இந்த பசங்களுக்கு யாருக்கும் தெரியலையே . இவங்க என்ன மனுஷங்கதானா ? எங்க போய் முடியப் போகுதோ? இந்தியாவின் முதுகெலும்பு இளைஞர்கள் …. இளைஞர்கள் கிட்ட தான் இந்த இந்தியா இருக்குதுன்னு சொல்றாங்க….. இவங்கள எல்லாம் பார்த்தா எனக்கு அப்படி தெரியல…. வேற மாதிரி தோணுது…. சின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்கிறது….. சின்ன வயசிலேயே தப்பு செய்றது….. சின்ன வயசுல யாருமே சரியான வாழ்க்கை வாழல.. உண்மையான அறிவு உண்மையான பண்பு, உண்மையான பழக்கம் இல்ல. மூத்தவங்களுக்கு மரியாதை கொடுப்பதும் அவங்க சொற்படி நடந்தால் அதுவ பெரிய விசயம். அதை விட்டுட்டு தனக்குத்தான் எல்லாம் தெரியும். தான்தான் பெரிய ஆள், அப்படி நினைக்கிற இந்த மனோபாவத்தை இந்த தலைமுறை வளத்தாங்கன்னா நிச்சயமா இடைவெளி வந்தே தீரும்… இந்த இடைவெளி எப்ப மாறும்…? இந்த இடைவெளி….. இடைவெளி இருக்கும் வரை …..என்று கருப்பன் சொல்லிக் கொண்டிருக்கும்போது,

அந்த இளைஞர் கூட்டம் இது எதைப் பற்றியும் சட்டை செய்யாமல் பேசாமல் இருந்து விட்டு அடித்துக்கொண்டும் பேசிக்கொண்டுமிருந்தார்கள்….. இது அத்தனையும் அந்த பழமுதிர் சோலையில் இருந்து ஆட்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்களே தவிர ஒருவரும் வாய் தவறி பேசவில்லை….

உண்மையான மரியாதை என்பது நாம் நம் வயதுக்கு மூத்தவர்களை நம் வயதில் மூத்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதையில் தான் இருக்கிறது…… அந்த இடைவெளியை நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல பண்புகள் தான் நிரப்பும் என்றார் கருப்பன் .

இதற்கு வரதன் பதில் ஏதும் பேசவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *