செய்திகள்

மராத்தா சமூகத்தின் இடஒதுக்கீடு: ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மே 5–

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

2018 ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும், 50 சதவீதத்துக்குமேல், மொத்த இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்ற 1992 ஆம் ஆண்டின் தீர்ப்புக்கு மாறாக, மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேலாக அரசாணை வெளியிடப்பட்டது.

ரத்து செய்து தீர்ப்பு

இதைத்தொடர்ந்து, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

மராத்தா சமூகத்தினருக்கு அதிக இடஒதுக்கீட்டை வழங்க எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 1992 ஆம் ஆண்டில் 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம், இந்திய அரசியல் சாசன பாதுகாப்புடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *