சிறுகதை

மரம் – ராஜா செல்லமுத்து

காலங்கள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. எத்தனையோ தலைவர்களை ,பெரியவர்களை அறிவாளிகளை, விஞ்ஞானிகளே கவிஞர்களை , இலக்கியவாதிகளை என்று இந்தக் காலம் விழுங்கி இருக்கிறது .

மனிதர்களுக்குத்தான் ஒரு மனிதன் இறந்த பிறகு சோகம் வருகிறது. அதை நினைத்து வருந்துகிறோம். ஆனால் புலரும் காலையும் மலரும் நிலவும் எந்தச் சலனமும் இல்லாமல் தவறாமல் வருகிறது. இரவு தோறும் நிலவு வெளிச்சம் தருகிறது.

இந்த பூமியில் புதிது புதிதாக பிறப்பதும் இறப்பதும் இயல்பாகிப் போன ஒன்றாக இருக்கிறது. அந்த அடிச்சுவட்டில் ராம் மேலே சொன்ன அத்தனை விஷயங்களையும் உள்வாங்கிக் கொண்டுதான் தன் அப்பாவின் நினைவு நாளை கொண்டாடுவதற்கு கடல் கடந்து சென்றான் .

ராமின் அப்பா கணேசன் எத்தனை உன்னதமான கலைஞன். இந்த உலகை மகிழ்வித்த அந்த மனிதன் இப்போது உயிருடன் இல்லை. உலகிற்கு வேண்டுமானால் கணேசன் கலைஞனாக இருக்கலாம்.

ராமுக்கு தகப்பன் எத்தனை எத்தனை அன்பையும் பாசத்தையும் விதைத்துச் சென்றார். அவர் இன்று உயிரோடு இல்லை. கணேசன் விட்டுச் சென்ற கலைகள் மட்டும் அழியாமல் இருக்கிறது.

ராம் விமானத்தில் பறக்கும் போதும் தரை இறங்கிய விமானம் ஓடுதளத்தில் ஓடும் போதும் கணேசன் நினைவாக நடத்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராம் காரில் சென்று கொண்டிருக்கும் போதும் கணேசனின் நினைவலைகள் ராமின் நெஞ்சில் வந்து வந்து போயின.

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் தன் தகப்பன் இந்த மண்ணில் செய்த புண்ணியம் சேவை தான் ராம் ஐ இங்கு அழைத்து இருக்கிறது என்று வியப்பாக எண்ணினார்.

விழா மாலை தான் என்பதால் அவரை விழா நடப்பதுபவர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். தந்தை போலவே வயதும் முதிர்ச்சியும் அடைந்திருந்த ராம் பார்ப்பதற்கு கணேசன் போலவே இருந்தார்.

தந்தையைப் பார்ப்பதாக சிலர் சிலாகித்து பேசினார்கள்.

ஓய்வெடுக்கட்டும் மாலை நிகழ்ச்சி இருக்கு. அவரை தொந்தரவு பண்ணாதீங்க என்று விழாக் குழுவினர் பார்வையாளர்களை அப்புறப்படுத்தினார்கள்.

ராம் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலையில் விழா நடக்கும் இடத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டார்.

விழா மேடையில் ராமுக்கு கேடயம் பொன்னாடை வழங்கப்பட்டது . கலைஞன் கணேசனை பற்றிய நினைவுகளைச் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார்கள். இது அத்தனையும் எல்லோரும் பேசுவது தான் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தார் ராம். வந்தவர்கள் எல்லாம் கணேசனின் இமாலய சாதனைகளைப் பற்றி புகழ்ந்து தள்ளினார்கள்.

அதற்கெல்லாம் அசையாமல் இருந்தார் ராம். தன் அப்பாவைப் பற்றிய நினைவுகளை சிலர் பகிர்ந்து கொண்டார்கள்.

அதுவரையில் அவருக்கு எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருந்தது.

ஒன்றா இரண்டா கேட்பதற்கு ஒரு லட்சம் தடவைக்கு மேல் கணேசனைப் பற்றிய பாராட்டுக்களை காதில் வாங்கி வாங்கி ராமின் உலகமே புகழுரைகளால் நிறைந்து கிடந்தது.

அதனால் இதெல்லாம் சாதாரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் .

ஆனால் விழாக் குழுவினர் விழா முடிந்த நேரம் ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார்கள். அப்போதுதான் ராம் விம்மி அழுதார். அவரின் அழுகையை யாரும் கட்டுப்படுத்த முடியவில்லை.

தன் தந்தையை பார்ப்பதாகவே எல்லோரிடமும் சொன்னார்கள். அந்த இடத்தை விட்டு ராம் எழுந்து வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலானது .

அது என்ன என்று ராமின் எண்ணத்திலிருந்து எழுகிறது.

சார் இந்த மாமரம் உங்க அப்பா வச்சது ; சுமார் 70 ஆண்டுக்கு முன்னால உங்க அப்பா நட்ட மரம் இது. அது வளர்ந்து காய்த்து குலுங்குகிறது என்று கூறி அந்த மாமரத்தை விழா குழுவினர் காட்டிய போது தான் அதுவரையில் உடைந்து போகாத உள்ளத்தை கொண்டு இருந்த ராம் உடைந்து சிதறி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார்.

அந்த மரத்தின் இலைகள் எல்லாம் தலையாட்டி தலையாட்டி ராமின் கண்ணீரைத் துடைக்க வந்தது போலிருந்தது. அந்த மரத்தை தொட்டுத் தடவினார். செடியாக இருந்தபோது தன் தந்தை தண்ணீர் ஊற்றி வளர்த்த மரம் இது என்று உற்சாகமாய் அந்த மரத்தை கட்டிக் கொண்டார்.

அதன் இலைகளை வருடி தன் தந்தையின் நினைவுகளை பகிர்ந்தார்.

அந்த மாமரத்தின் நிழலில் அமர்ந்தார். மேலே பார்த்தார் . கீழே பார்த்தார். அக்கம்பக்கம் என்று பார்த்துக் கொண்டிருந்தார். தந்தை கணேசன் தன்னைச் சுற்றி இருப்பதாகவே ராம் அந்த இடத்தை விட்டு எழுந்து வரவே மனம் இல்லாதவராய் அந்த மரத்தோடு நின்று ஒரு செல்பி எடுத்துக் கொண்டார் .

நீண்ட நாட்களாக அந்த இடத்திற்கு வராமல் இருந்தார். அந்த மரத்தைப் பார்த்த பிறகு அடிக்கடி வருவதாக உறுதி சொன்னார் .

விழா குழுவினருடன் சென்று கொண்டு இருந்த போதும் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றார்.

போய் வா மகனே என்று அந்த மாமரம் ராமுக்கு கையசைப்பது போல் இருந்தது .

திடீரென திரும்பி ஓடிவந்த ராம். மரத்தை ஆரத் தழுவி ஒரு சேரக் கட்டிக் கொண்டார் .

அவர் எண்ணத்தில் அவரின் தந்தையை கட்டி பிடிப்பதாக நினைத்தார்.

இதைப் பார்த்த விழா குழுவினருக்கு என்னவோ போலானது .

முன்னை விட இப்போது ராம் நிறைய அழுது கொண்டிருந்தார். அவர் அழுது விட்டு வரட்டும் அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று விழாக் குழுவினர் ஒதுங்கி நின்று கொண்டார்கள் .

ராம் அந்த மரத்தோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

மரம் பேசுமா? என்று கேள்வி கேட்டவர்களுக்கு மரத்தை வைத்துப் பாருங்கள் . அதற்கு தண்ணீர் ஊற்றி வளருங்கள். நிச்சயம் மரங்களின் மொழி உங்களுக்கு புரியும் என்று சொன்னார் அங்கே நின்றிருந்த ஒரு பெரியவர்.

ராம் அந்த மரத்துடன் மனம் திறந்து மகிழ்ச்சியாக ஏதாே பேசிக்கொண்டு இருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *