செய்திகள்

‘மரப்பலகை, பிளைவுட்’–க்கு பதில் தீப்பிடிக்காத, கரையான் அரிக்காத இண்டோ வுட் பலகை அறிமுகம்

Spread the love

சென்னை, ஆக. 22–

மரப்பலகை, பிளைவுட் ஆகியவற்றுக்கு மாற்றாக தீப்பிடிக்காத கரையான் அரிக்காத புதியரக இண்டோ வுட் பலகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவசாய கழிவுகள், இதர நார் சத்துக்கள், கலப்படமில்லாத பாலிமர் கலந்து இந்த பலகை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மரப்பலகை போல துளையிடலாம். அறுக்கலாம், ஆணி அடிக்கலாம், பெயிண்ட் பூசலாம் என்று இதை அறிமுகம் செய்த இண்டோவுட் பாலிமர்ஸ் தலைவர் பி.எல். பெங்கனி தெரிவித்தார்.

சென்னையில் தச்சு பணி பொருட்கள் விற்பனை செய்யும் மிலம் சேல்ஸ் கூட்டுடன் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பேணும் இந்த பலகை எளிதாக மறுசுழற்சி செய்ய முடியும். தீப்பிடிக்காது, வளையாது, பிளக்காது, ரசாயனம் சிந்தினால் பாதிக்காது. கட்டுமான பொருட்களுக்கு ஏற்றதாக உள்ளது. உறுதியானது. பிளைவுட்டை விட உறுதியானது என்று பெங்கனி தெரிவித்தார்.

இவற்றை நீர் உள்ள குளியலறை, மாடி அறைகளாக பயன்படுத்தலாம். 6 மி.மீ. முதல் 25 மி.மீ. தடிமனில் இந்த பலகை கிடைக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *