செய்திகள்

மரபணு கோளாறால்‌ பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமிக்கு அதிநவீன சிகிச்சை: சிம்ஸ்‌ மருத்துவமனை சாதனை

Makkal Kural Official

ஒரு லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் நோய் என தகவல்

சென்னை – ஜூலை 11–

சிம்ஸ்‌ மருத்துவமனை முன்னோடியான மருத்துவ சிகிச்சை அளிப்பதில்‌ எப்போதும்‌ முதன்மையாக விளங்குகிறது. இதை நிரூபிக்கும்‌ வகையில்‌ ‘ஃபிஃபர்‌ சிண்ட்ரோம்‌’ என்னும்‌ கடுமையான மரபணு கோளாறால்‌ பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமிக்கு மருத்துவ துறையில்‌ அதிநவீன அறுவை சகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு மீண்டும்‌ ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

இது, மருத்துவ அறிவியலில்‌ குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும்‌ சிகிச்சையின்‌ வெற்றிக்கான நம்பிக்கையை பெற்று வருவதைக் காட்டுறது.

ஃபிஃபர்‌ சிண்ட்ரோம்‌ என்பது சிக்கலான மரபணு கோளாறு. புதிதாக பிறக்கும்‌ 1 லட்சம் குழந்தைகளில்‌ ஒருவருக்கு இந்த அரிய நோய்‌ ஏற்படுகிறது. இந்த நிலையில்‌ குழந்தைக்கு மண்டை ஓட்டில்‌ உள்ள சில எலும்புகள்‌ அவற்றின்‌ வளர்ச்சியில்‌ ஆரம்பத்திலேயே இணைந்திருக்கும்‌. இது மண்டை ஓடு சாதாரணமாக வளர்வதை தடுக்கிறது. இதனால்‌ குழந்தையின்‌ தலை மற்றும்‌ முகத்தின்‌ வடிவத்தை பாதிக்கிறது. மேலும்‌ கைகள்‌ மற்றும்‌ கால்களையும்‌ கூட பாதிக்கிறது. சில நேரங்களில்‌ மூளையை சுற்றி அழுத்தம்‌ அதிகரிக்கிறது.

இந்த மண்டை ஓட்டின்‌ எலும்புகளின்‌ முன்கூட்டிய இணைவு ஏற்படும்‌போது ‘சியாரி’ குறைபாடு உண்டாகிறது. இந்நிலையில்‌ மூளையில்‌ அதிகப்படியான அழுத்தம்‌ ஏற்பட்டு அதன்‌ ஒரு பகுதி முதுகெலும்பு பகுதியில்‌ நகர்த்துகிறது. இது குழந்தையின்‌ ஓட்டுமொத்த ஆரோக்‌கியத்தில்‌ தீங்கு விளைவிக்கும்‌. மூளை பணிகள்‌ செய்யும்‌ திறனை தடுக்கும்‌. மிதமான அல்லது மோசமான அறிகுறிகளை ஏற்படுத்தும்‌.

இத்தகைய நோய் சிகிச்சையில் புரட்சி செய்துள்ளது சிம்ஸ்‌ மருத்துவமனை.

மண்டை ஓட்டின்‌ பின்புறம்‌ உள்ள எலும்புகளை மிக மெதுவாக நகர்த்துவதற்கு சிறப்பு சாதனங்கள்‌ பயன்படுத்தப்படும்‌. காலப்போக்கில்‌ உச்சந்தலையை மெதுவாக நீட்டுவதன்‌ மூலம்‌ மண்டை ஓட்டின்‌ உள்ளே உள்ள இடத்தை குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்பு மற்றும்‌ விரிவாக்கத்துக்கு மண்டை இசை திருப்ப அனுமதிக்கப்படும்‌ சிகிச்சை. இதனால்‌ மூளையின்‌ வளர்ச்சிக்கு கூடுதல்‌ இடம்‌ உருவாக்குகிறது. மேலும்‌ அறுவை சிகிச்சை அணுகுமுறையுடன்‌ தொடர்புடைய ஆபத்துகளையும்‌ தணிக்‌கிறது என்கிறார் மூத்த ஆலோசகர்‌ டாக்டர்‌ சுரேஷ்‌ வீரமணி.

இந்த சிகிச்சை முறை அறுவை சிகிச்சையின்‌ நேரத்தை குறைப்பதோடு ரத்த இழப்பு ஏற்படுவதையும்‌ தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்‌ நீண்ட காலம்‌ மருத்துவமனையில்‌ இருக்க வேண்டியதில்லை.

குழந்தையின்‌ குடும்பத்தினர்‌ பேசுகையில்‌, “எங்கள்‌ குழந்தைக்கு ஃபைபர்‌ சிண்ட்ரோம்‌ இருப்பது கண்டறியப்பட்டபோது உலகம்‌ சுருங்கியது போல்‌ தோன்றியது. சிம்ஸில்‌ உள்ள மருத்துவர்கள்‌ எங்களுக்குள்‌ நம்பிக்கையை விதைத்தனர்‌.

ஒவ்வொரு செயல்முறையையும்‌ உன்னிப்பாக விளக்‌கினார்கள்‌. எங்கள்‌ மகள்‌ மகிழ்ச்சியுடன்‌ இருக்கிறாள்‌. டாக்டர்கள் காட்டிய உண்மையான அக்கறை, அவளது உயிரைக்‌ காப்பாற்றியதற்காக நாங்கள்‌ என்றென்றும்‌ நன்றியுள்ளவர்களாக இருப்போம்‌” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

சிம்ஸ்‌ மருத்துவமனையின்‌ நரம்பியல்‌ துறையின்‌ ஆலோசகர்‌ டாக்டர்‌ விஸ்வராஜ்‌ கூறுகையில்‌, நாங்கள் வெற்றிகரமாக செயல்பட்டதில்‌ உண்மையில்‌ பெருமை கொள்கிறோம்‌ என்று கூறினார்‌.

எஸ்ஆர்எம் குழுமத்தின்‌ தலைவர்‌ டாக்டர்‌ ரவி பச்சமுத்து கூறுகையில்‌, “சிம்ஸ்‌ மருத்துவமனை எப்போதும்‌ அரிய வகை சிக்கலான நோய்களுக்கும்‌ புதுமையான மருத்துவ சேவையின்‌ அர்ப்பணிப்பை வழங்குவதை குறிக்கோளாக கொண்டு செயல்படும்‌. அந்த வகையில்‌ இந்த கடுமையான மரபணு கோளாறால்‌ பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமிக்கு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை வழங்கியுள்ளது. உண்மையில்‌ இந்த நோய்க்கான சிகிச்சை மருத்துவ முன்னேற்றத்தின்‌ தாக்கத்துக்கு சிறந்த சான்றாக உள்ளது. உண்மையில்‌ இத்தகைய சிகிச்சை முறை மருத்துவத்துறையில்‌ அசாதாரணமானது” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *