விழுப்புரம் பிப். 20–
மயிலம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை நடைபெறம் கும்பிபேஷக விழாவையொட்டி மூன்றாம் கால மகா கணபதி வேள்வி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பால சித்தர், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான் ஆகிய சுவாமிகளின் திரு குட முழுக்கு நன்னீராட்டு பெரு விழாவானது நாளை (21–ந் தேதி) நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து சிவஞானியின் மகிமை நூல் வெளியிடப்படுகிறது.
இதனை முன்னிட்டு 15–ந் தேதி ஸ்ரீ விநாயகர், பால சித்தர், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான் வழிபாடு இறை அனுமதி பெறுதல் மகா கணபதி வேள்வி, திருமகள் வேள்வி, கன்னிகா பூஜை மற்றும் கோ பூஜை ஆகியவை நடைபெற்று வேள்வியில் பூர்ணாஹூதி செலுத்தப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகநேற்று இரவு யாக சாலை வேள்வியுடன் மூன்றாம் கால யாக சாலை வேள்வியும் நடைபெற்றது. வேள்வியில் நெய் முதலான 108 புனிதப் பொருட்கள் செலுத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற மூன்றாம் கால யாக சாலை பூஜை பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு சந்நிதானங்களை சேர்ந்த ஆதினங்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.