பொள்ளாச்சி, ஜூலை 31–
பொதுமக்களை அச்சுறுத்திய மக்னா யானை பொள்ளாச்சி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்களை மக்னா யானை சேதப்படுத்தி வருவதாக மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். மேலும் யானையை பிடிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தனர்.
இன்று காலை பிடிபட்டது
இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மக்னா யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சின்னகல்லார் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக மக்னா யானையை பிடிக்க சேத்துமடையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் இருந்து முத்து, சுயம்பு, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.