திருவண்ணாமலை, டிச. 13–
திருவண்ணாமலை மாவட்டம் ஒரந்தவாடி கிராமத்தில் மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழக்குப்பம், செங்கம் தாலுகா, ஒரந்தவாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு மனைவி வள்ளி என்பவருடன் திருமணம் நடந்து, 3 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.
ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
இதனைத் தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த தொழிலாளி பழனி (வயது 45), மனைவி வள்ளி (வயது 37), மகள்கள் திரிஷா (வயது 15), மோனிகா (வயது 14), மகன்கள் சிவசக்தி (வயது 6), ஆகியோரை வெட்டிக் கொலை செய்துவிட்டு பழனி தற்கொலை செய்து கொண்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 வயது பூமிகா, அரசு மருவத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
குடும்பத் தகராறில் மனைவி, 4 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் பழனி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.