செய்திகள்

மனைவியை பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, டிச. 12-

சீனு ராமசாமி தனது மனைவியை விட்டு பிரிய இருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் சீனு ராமசாமி. இவரது கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்கள் இன்றளவும் பேசப்படும் படங்களாக உள்ளன.இந்த நிலையில், மனைவியைப் பிரிவதாக இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி ஜி.எஸ். தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *