செய்திகள்

மனைவியோடு காரை கடத்திய கடத்தல்காரர்கள்: கணவன் புகார்

சண்டிகர், ஜன. 10-

காரில் அமர்ந்திருந்த மனைவியோடு காரை கடத்திக்கொண்டு போன கடத்தல்காரர்கள் மீது போலீசில் கணவர் புகார் கொடுத்துள்ளார் .

சண்டிகர் அருகே பஞ்சாபின் தேரா பாஸ்ஸியில் ராஜீவ் என்பவர் தனது மனைவி ரிது மற்றும் ஐந்து வயது குழந்தையோடு வசித்து வருகிறார். அவரது குழந்தை அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறது.

இந்நிலையில் அந்த தம்பதி தங்களின் மகளுக்கு பள்ளியில் பீஸ் கட்டுவதற்காக காரில் சென்றார்கள். அப்போது ராஜீவ் தன்னுடைய மனைவி ரிதுவை அந்த காரிலேயே அமர சொல்லிவிட்டு, காரிலேயே சாவியையும் விட்டு விட்டு பள்ளிக்குள் போனார்.

அவர் பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில் 2 வாலிபர்கள் அந்த காரில் ஏறி, அந்த பெண்ணோடு அந்த காரை கடத்தி சென்றார்கள். அப்போது அந்த காரில் அமர்ந்திருந்த அவரது மனைவி கூச்சலிட்டார். ஆனால் அதை பொருட்படுத்தாத அவர்கள் அந்த காரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கடத்தி சென்ற பிறகு அந்த காரிலிருந்து ரிதுவை ஒரு டோல் கேட் அருகே தள்ளிவிட்டு சென்றார்கள்.

இதற்கிடையே ஸ்கூலில் பீஸ் கட்டிவிட்டு வெளியே வந்த ராஜீவ், வெளியே நிறுத்தியிருந்த காரையும் அதில் உட்கார்ந்திருந்த தன்னுடைய மனைவியையும் காணாததால் திடுக்கிட்டார் . உடனே அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு, கார் கடத்தல் பற்றி அறிந்தார். பிறகு அவரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *