சிறுகதை

மனிதர்களின் மரியாதை – ராஜா செல்லமுத்து

பேச்சியம்மாள் கிழவிக்கு வயது நூறைத் தொட்டிருக்கும். அவர் இறப்பு ஒரு பூரண இறப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அந்த இறப்பிற்கு சொந்த பந்தங்கள் தவிர ஒரு கூட்டமே குழுமியிருந்தார்கள். 100 வயது கடந்த பேச்சியம்மாளை ஒரு திருவிழா போல எடுத்துச் சென்று தான் அடக்கம் செய்தார்கள் .

பேச்சியம்மாளின் மகன் பொன்னரசு. அரசாங்கத்தில் பெரிய உத்தியோகத்திலிருந்தார். அந்த ஏரியா மனிதர்களுக்கும் அந்த ஊரைச் சார்ந்தவர்களுக்கும் அவர் எத்தனையோ உதவிகள் செய்து கொண்டிருந்தார்.

அதனால் அந்த மக்கள் பேச்சியம்மாள் இறப்பிற்கு வந்திருந்தார்கள்.

சில நேரங்களில் சில வேலைகளை செய்ய முடியாது என்று பாென்னரசு ஒதுக்கி தள்ளி இருந்தாலும் பேச்சியம்மாள் இறப்பிற்கு வந்து அதை பொன்னரசு பார்த்தால் எப்படியாவது அந்த வேலையை முடித்துக் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கை பேச்சியம்மாவின் இறப்பிற்கு வந்தவர்களுக்கு இருந்தது.

அதனால் பொன்னரசுவின் தயவு வேண்டும் என்பதற்காக அத்தனை பேரும் அவர் அம்மா இறப்பிற்கு வந்திருந்தார்கள் .

பொன்னரசு வந்தவர்களை ஒரு நாேட்டமிட்டுப் பார்த்தார். எல்லாம் நம் தயவிற்காகத்தான் இறப்பிற்கு வந்திருக்கிறார்கள் .

அம்மா இறந்து விட்டதற்காக யாரும் வரவில்லை என்பது அவருக்கு அப்பட்டமாக தெரிந்தது.

அதை மனதிற்குள் நினைத்துக் கொண்ட பொன்னரசு வெளியில் சொல்லாமல் இருந்தார்.

இறப்பிற்கு வந்திருந்தவர்கள் கூட வெளிப்படையாகப் பேசிக் கொண்டார்கள் .

பெரிய உத்தியோகத்தில் இருக்கிற ஆளு பொன்னரசு. அப்படி இப்படி வந்து போனா தான் நமக்கு ஏதாவது கிடைக்கும் .இல்ல கஷ்டம் தான் என்று இறப்பிற்கு வந்த இவர்கள் பேசிக் கொண்டார்கள்.

பேச்சியம்மாளை எடுத்து அடக்கம் செய்து வீட்டுக்கு வரும் வரைக்கும் அத்தனை பேரும் அச்சுக்குழையாமல் நின்றிருந்தார்கள்

நாட்கள் கழிந்தன. இறப்பிற்கு வந்த அத்தனை பேர்களும் பாென்னரசு அலுவலகம் நோக்கிச் சென்றார்கள் .

பொன்னரசு இப்போது கொஞ்சம் அந்தப் பிடியை தளர்த்தி இருந்தார். சிலருக்கு சில சலுகைகள் செய்ய ஆரம்பித்தார் .

நாட்கள் கடந்து மாதங்கள் கடந்தன. வருடங்கள் கடந்தன.

பொன்னரசுவின் தயவால் சில விஷயங்களை செய்து முடித்தவர்கள் பொன்னரசுவின் வீட்டு எந்த விசேஷமாக இருந்தாலும் அடிக்கடி போய் வந்தார்கள் .

காலங்கள் கடந்த பின்னால் ஒருநாள் பொன்னரசு இறந்து போனார்.

பொன்னரசுவின் தாயார் இறப்பிற்கு பின்னால் சில விஷயங்கள் ,விசேஷங்கள் வைத்தார் பொன்னரசு .

அதற்கெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் வந்தபோது பொன்னரசு இறப்பிற்கு மட்டும் நிறைய பேர் வரவில்லை .

இது அந்த ஊர் மக்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. வெளிப்படையாக ஒருவர் கேட்டார்.

ஏங்க பாென்னரசு உயிரோடு இருக்கும்போது, நிறைய பேரு வந்தாங்க. அவங்க அம்மா இறந்ததுக்கும் அவர் வச்ச மத்த விசேஷங்களுக்கு நிறைய ஆள் வந்தாங்க .

ஆனா பொன்னரசு இறந்து போயிட்டாரு. நிறைய பேரு வரலையே ?என்ன காரணமா இருக்கும்? என்று கேட்டபோது

அட இந்த உலகமே இப்படித்தான்க ஒரு மனுஷன் உயிரோடு இருக்கும் போது, அவன ஐஸ் வச்சு, குளிப்பாட்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *