வாழ்வியல்

மனிதனின் இதயத்திற்கு பாதுகாப்பான உணவுகள்!

நோய்கள் அதிகரித்தன. இருதய நோயும், ரத்த கொதிப்பு, நீரிழிவு, டி.பி. போன்ற நோய்கள், டெங்கு போன்ற கொசு நோய் அதிகம் உள்ளதால் மக்கள் மிக விழிப்புணர்வுடன் இனிப்பு, கொழுப்பை தவிர்த்து, கசாயம், வேப்பெண்ணெய், மலை வேம்பு கசாயம், அருகம்புல் சாறு, இயற்கை வழி விளைந்த பொருட்கள் என இவற்றை வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

இதில் இருதயத்திற்கு நல்லது என தெலுங்கானா, ஐதராபாத்தில் உள்ள ‘தேசிய ஊட்டச்சத்து வாரியம் சில உணவுகளை சிபாரிசு செய்துள்ளது.

1) தானிய வகைகளில் கோதுமை, அரிசி, ராகி, சோளம், கம்பு, மக்காசோளம், சாமை, தினை போன்றவற்றை தேவையான அளவு சாப்பிடலாம். கேக், ரொட்டி, பரோட்டா, நூடுல்ஸ் தவிருங்கள்.

2) பருப்பு வகைகளில் முழு கொட்டையான பயிறுகள், முளைகட்டிய பயிறுகள், பருப்புக்களை சாப்பிடலாம். பொறிக்கப்பட்டதை தவிருங்கள்.

3) அனைத்து பழங்களும் சிறிதளவு சாப்பிட்டு வரலாம்.

4) காய்கறிகளில் கீரை, பல வகை காய்கள், அதிகம் சாப்பிடலாம். கிழங்குகளை அளவுடன் சேறுங்கள். சிப்ஸ் வேண்டாம்.

5) மோர், கொழுப்பு நீக்கிய பால் அருந்துங்கள்

நெய், வெண்ணெய் பால்கோவா தவிருங்கள்.

6) முட்டைகளில் வெள்ளைகரு

(7) மாமிச உணவுகளில் மீன், அளவுடன் கோழிக்கறி சாப்பிடலாம். ஆடு/மாட்டு மாமிசம் கூடாது.

8) உறையாத தாவர எண்ணெய் உடலுக்கு நல்லது. வெண்ணெய், நெய், வனஸ்பதி தவிர்த்து விடுங்கள்.

9) இனிப்பில் வெல்லம் நல்லது. சாக்லேட், ஐஸ்கிரீம் தவிருங்கள்.

10) பானங்களில் இனிப்பு சேர்க்காமல், பழரசம், தேனீர், சூப் அருந்தலாம். கோலா, மது அறவே கூடாது.

11) இயற்கை உப்பு இப்போது உண்பதில், 25% மட்டும் சாப்பிடலாம். குறைத்துவிடுங்கள்.

ஊறுகாய், உப்பு பிஸ்கட் விட்டுவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *