செய்திகள்

மனதிற்கு பிடித்தமான வேலையை தேர்ந்தெடுத்தால் தானாக நடக்கும்

அகமதாபாத், மார்ச் 20–

மனதிற்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தால் அந்தப் பணி தானாகவே நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 டி20 போட்டி தொடர், அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தத் தொடரில் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டாலும், காயம் காரணமாக அவரால் ஒரு போட்டியில்கூட விளையாட முடியவில்லை.

இந்நிலையில் நடராஜனின் காயம் பூரண குணமடைந்து அவர் வலைப்பயிற்சியும் தொடங்கிவிட்டார். ஆனால் இன்றையப் போட்டியில் நடராஜன் பங்கேற்பாரா எனத் தெரியவில்லை.

தானாக நடக்கும்

ஆனால், மார்ச் 23-ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நடராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடருக்கு பின்பு இந்திய அணிக்காக நடராஜன் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடராஜன், உங்களின் மனதுக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தால், அதற்காக நீங்கள் வேலைசெய்யாத நிலையிலும், அந்தப் பணி தானாகவே உங்கள் வாழ்க்கையில் நடக்கும் என்று கூறியுள்ள நடராஜன், இந்திய அணியினருடன் இணைந்ததில் மகிழ்ச்சி என டுவிட்டரில் நடராஜன் பகிர்ந்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *