நல்வாழ்வு
மனச்சோர்வு என்பது ஒருவகை மனநிலை குறைபாடாகும். இதன் அடையாளங்களாக சோகம், தனிமை மற்றும் தினசரி செய்யும் எளிய நடவடிக்கைகளில் கூட ஆர்வமின்மை ஆகியவை உணரப்படுகிறது.
உச்சகட்டமாக இதன் விளைவில் சிலர் தற்கொலைக்குக் கூட முயற்சிக்கின்றனர். குங்குமப்பூ மனநிலையை மேம்படுத்தும் தன்மையுடையது என்று மருத்துவ ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ஃப்ளூக்ஸீடின் மற்றும் இம்ப்ரமைன் போன்ற பிரபலமான மனநிலை மேம்படுத்தும் மருந்துகளுடைய தன்மையுடன் குங்குமப்பூவை ஒப்பிடுகின்றனர்.
குங்குமப்பூவில் குரோசின் மற்றும் சப்ரானல் போன்ற கலவைகள் உள்ளன.இவை மன அழுத்த நீக்கிகளாகச் செயல்படுகின்றன என்று பல மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுதுகின்றன . குங்குமப்பூ மலர்களின் இதழில் இருந்து தயாரிக்கப்பட்ட சாறு மிதமான மன அழுத்தத்தை போக்க உதவும்.