வாழ்வியல்

மனக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்து பேராசையை உண்டாக்கும் சர்க்கரை

அதிக சர்க்கரையால் மூளையில் சுரக்கும் டொபமைன் ரசாயனம் – மனக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும்; பேராசையை உண்டாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

* ரத்தத்திலுள்ள அதிகப்படியான சர்க்கரை ரத்தக்குழாய் சுவர்களைத் தடிக்கச் செய்யும். இதயத்துக்கு அதிக அழுத்தம் உண்டாகும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வரும்.

* கணையம் அதிக இன்சுலினைச் சுரக்க வேண்டி வரும். அதிகமான வேலைப்பளு காரண மாக கணையம் செயலிழந்து, இன்சுலின் சுரப்பு குறைந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்.

* ரத்தத்திலுள்ள அதிக சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றுவது சிறுநீரகத்தின் வேலை. அதிகமான சர்க்கரையைப் பிரிக்க வேண்டி இருப்பதால் வேலைகூடி சிறுநீரகம் செயலிழந்து போகும். அதனால் மற்ற கழிவுகளைப் பிரித்து வெளியேற்றுவதும் பாதிக்கப்படும்.

* அதிக சர்க்கரையின் இலக்கு மூளை என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. அதிக சர்க்கரையால் மூளையில் டொபமைன் என்னும் ரசாயனம் சுரக்கிறது. இதனால் ஒருவித மகிழ்வு உணர்வை மக்கள் பெறுவர். மீண்டும் மீண்டும் அந்த உணவை உண்ண வேண்டும் என்று தோன்றும். நாளடைவில் கட்டுப்பாட்டை இழத்தல், கட்டுக்கடங்காத ஆசை ஆகியன நேரும்.

* “அல்ஸீமர்” போன்ற கொடிய நோய்கள் (நரம்பு சம்பந்தமானவை), வர அதிக சர்க்கரையே காரணம். சில ஆய்வாளர்கள் ‘அல்ஸீமர்’ நோயை ‘மூன்றாம் வகை நீரிழிவுநோய்’ என்று கூடச் சொல்கின்றனர்.

* சர்க்கரை அளவு மாறிக்கொண்டே இருந்தால் அதிக எரிச்சல் அடைதல், மூட் மாறிக்கொண்டே இருத்தல், மயக்கம், மூளை மந்தமாதல் ஆகியன நேரிடும்.

* “செரடோனின்” என்ற நியூரோட்ரான்ஸ் பிட்டர் சுரந்து மனச்சோர்வை உண்டாக்கும்.

* உடலிலுள்ள ‘வைட்டமின் பி’ சத்து உறிஞ்சப்பட்டு விடுகிறது.

* கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தில் தடை உண்டாக்குகிறது.

* நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.

* கால்சியம் அளவு ரத்தத்தில் குறையும்போது, எலும்பிலிருந்து கால்சியம் உறிஞ்சப்படுகிறது. இதனால் எலும்புகள் பலவீனமடைந்து “ஆஸ்டியோ போராஸிஸ்” உண்டாகிறது. ஆகவே சர்க்கரை ஆபத்தானது.

நன்றி : – டாக்டர். ஜெ. விஜயாபிரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *