செய்திகள் நாடும் நடப்பும்

மத இன பிரிவினைவாதிகளின் பிடியில் சிக்கித்தவிக்கும் பாலஸ்தீன மக்கள்


ஆர்.முத்துக்குமார்


இன்றைய சிக்கல் 200 ஆண்டுகளுக்குப் பிறகு எப்படிப் பார்க்கப்படும்? கலவரத்தில் ஈடுபட்டோருக்கு உரிய தீர்வு கிடைத்து விடுமா? பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஏசுபிரான் ரோமானியர்களுக்கு எதிராய் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட ஓரு காரணம் இஸ்ரேல் பகுதியில் வாழ்ந்த யூதர்களுக்கும் பிறருக்கும் ஏற்பட்ட இன்னல்களை எதிர்க்கத்தான்!

சங்க காலத்தில் இருந்தே யூதர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் ரோமானியர்களும் இதர குறு நில மன்னர்களும் ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்து அப்பகுதியின் குடிமக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு இன்னல்களை ஏற்படுத்துவது வாடிக்கை.

ஏசுநாதரின் சீடர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் மற்றும் இதர நிலவரங்களால் யூதர்கள் ஏசுவின் வழியை பின்பற்றாது அவரது போதனைகளை மட்டும் புதிய ஏற்பாடாக அறிவித்து மத கலவரத்திற்கு வித்திட்டது.

பைபிளில் யூதர்களின் வாழ்வும் வாழ்ந்த பகுதிகளும் விரிவாகவே கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் எகிப்து முதலிய அரபு நாடுகளில் உருவான இஸ்லாமிய மத போதகங்களால் யூதர்களுக்கு சவாலாக மாற அப்பிரதேசமே பல்வேறு மத, இன, கலாச்சார சச்சரவு பிரதேசமாக மாறியது.

17–ம் நூற்றாண்டில் எப்படி நம் நாட்டை தங்களது வர்த்தக தொடர்புளுக்காக பிடித்த ஆங்கிலேயர்கள் நம்மைச் சுரண்டி அடிமை நாடாக அறிவித்து ஆண்டார்களோ அதேபோல் இஸ்ரேல் ஒரு பகுதியான பாலஸ்தீனத்தை பிடித்துக் கொண்டது.

யூதர்களுக்கு புகலிடமாக மாறத் துவங்கிய பாலஸ்தீனத்தை கண்டு ஜெர்மனியின் தலைவர்கள் அஞ்சிட காரணம் அந்நிய சக்திகள் இப்படி ஒரு பகுதியை பிடித்துக் கொண்டு உலக வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடிகிறது என்பதால் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்தோரை வெளியேற்ற யுத்தங்களை அரங்கேற்றியது!

ஏசு பிரான் காலத்தில் யூதர்களுக்கு பிரச்சினை ரோமானியர்கள்! 19–ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகள்!

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிய நாட்டு சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்களை அடியோடு அழித்து விட தனது ராணுவத்தை ஏவினார்.

ஹாலோ காஸ்ட் (Holocaust) என்று கூறப்படும் நிகழ்வில் கிட்டத்தட்ட 3 லட்சம் யூதர்கள் ரசாயன விஷவாயு தாக்குதலில் மூச்சுத் திணறி மடிந்த ரத்தக்கரை பதிந்த வரலாற்று பக்கங்கள் இன்றும் மனித குலத்திற்கு ஓர் அவமானச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது.

அது மத, இன பிரிவுகளுக்கு அப்பால் மானுடம் என்பதை மறந்த ஹிட்லர் மீது ஆத்திரப்பட்டோம். உண்மையில் யூதர்களின் வாழ்வில் சாமானியன் விரும்பும் சுதந்திரம் ஏதும் கிடைக்காமல் சொந்தமாக (வீடு) தலைக்கு மேல் கூரை, பாதுகாப்பாக தூங்கி உயிரோடு மறுநாள் காலை எழுந்து வாழ முடியாமல் இருப்பதை பற்றி அக்கரையின்றி இருந்து விட்டோம்.

1947ல் ஐ.நா. சபை தலையீட்டால் அரபு – இஸ்ரேல் சண்டைகளுக்கு ஓரு தீர்வாக பாலஸ்தீனத்தை யூதர்கள் வாழ் பிரதேசங்களான மேற்கு கரை (West Bank) மற்றும் காசா பகுதி என பிரிந்து செயல்பட வைத்தது.

அதாவது ஒரு பக்கம் இஸ்ரேல், அருகாமையில் பாலஸ்தீனம் மற்றும் அரபு நாடுகள்!

இந்த குளறுபடி காட்சிகளில் கிறித்துவர்களின் புனித இடமான பாலஸ்தீனத்தின் மீது ஆதிக்கத்தை கைவிட மனம் ஏற்காது இருப்பதால் தொடரும் ஆதிக்க போக்கு!

ஆங்கிலேயர்கள் 1947ல் எப்படி இந்தியாவையும் பாகிஸ்தானையும் மத அடிப்படையில் பிரித்து விட்டு வெளியேறினார்களோ, அதேபாணியில் யூதர்கள் இருந்த பகுதியை இஸ்ரேல் என்றும் புதிதாக உருவான பாலஸ்தீனம் அரபு மத இனத்தவர்கள் வாழும் பகுதியாகவும் மாற்றினர்.

அதாவது இஸ்ரேலை விட்டு நாட்டையும் தங்களது அடையாளத்தையும் துறந்து பிரிந்த சுமார் 8 லட்சம் பேர் பாலஸ்தீனர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதில் சுவாரசியமான ஒன்று புனித நகரமான ஜெருசலேம் சர்வதேச நகரமாக அறிவிக்கப்பட்டு ஐ.நா.வின் அங்கீகாரத்தையும் பெற்று எல்லா உதவிகளையும் பெற்று சுதந்திர நாடாக செயல்பட ஆரம்பித்தது.

அன்று பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ‘அல் நக்பா’ அதாவது பேரழிவு என்று கூறுகின்றனர்.

இஸ்ரேலுக்கும் ஜெருசலேமிற்கும் தரப்படும் உதவிகள் ஏனோ பாலஸ்தீனிய மக்களுக்கு தரப்படாமல் குடிதண்ணீருக்கும் மின்சாரத்திற்கும் ஏங்கிக் கொண்டு இருக்கும் சமுதாயமாக தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தச் சிக்கலில் ஏன் இஸ்ரேலை விட்டு புலம் பெயர வேண்டும்? அங்கு மட்டும் சொர்க்க வசதிகள் கிடைக்கவா போகிறது? என்று கருதி பலர் இஸ்ரேலின் வெளிவட்டப் பகுதியில் காசா என்ற எல்லை தாண்டிய பகுதியில் குடியேறினர்!

அப்பகுதியில் பாலஸ்தீனியர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒருவர் யாசர் அராபத்! அவரை உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து அங்கீகரிக்க தவறிய கட்டத்தில் அவர்களின் நலன் மீது அக்கறை கொண்டு உதவிக்கரம் நீட்டியது பிரதமர் இந்திரா காந்தியாவார்.

இந்திராவின் படுகொலைக்கு பின்னணியில் இருந்த பல்வேறு காரண காரியங்களில் அராபத்திற்கு உதவியதும் இருந்து இருக்கலாம். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு பிரதமராக பதவி ஏற்ற ராஜீவ் காந்தி தந்த உதவிகள் அப்பகுதி வாழ் மக்களின் நிலைமை சீரடைய துவங்கியது தான் உண்மை!

அரபு நாடுகள் ஐரோப்பிய நாடுகளால் வஞ்சிக்கப்பட்டு ஆதரவு ஏதுமின்றி இருந்தோரின் வாழ்வில் வெளிச்சத்தை தந்தவர்கள் நாம் தான்!

ஆனால் கால சக்கர ஓட்டத்தில் யாசர் அராபத்தின் மறைவுக்குப் பிறகு அவரது கட்சி தேர்தலில் தோற்று ஹமாஸ் கட்சியினர் ஆட்சியை பிடித்தனர். இவர்கள் மத தீவிரவாதிகள் என்று இஸ்ரேலும் அரபு நாடுகளும் அறிவித்து மீண்டும் இப்பகுதியில் தாக்குதல்களை துவக்கியது.

ஹமாஸ் தீவிரவாதிகளாக இருந்தாலும் அவர்களது பாதுகாப்பில் பல லட்சம் பாலஸ்தீனர்களின் உயிர் வசப்பட்டு இருப்பதை ஐ.நா. சபையும் இதர சர்வதேச அமைப்புகளும் மறந்துவிட்டது.

தற்சமயம் ஹமாசுக்கு உதவினால் தீவிரவாதத்திற்கு துணை போவதாக கருதப்படும்! ஆகவே அழிந்து கொண்டு இருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு அதாவது யூதர்களுக்கு உதவிக்குரல் கொடுக்க எந்த நாடும் முன்வர மறுப்பது ஏன்? என்று புரிகிறது.

இது உலக அரசியலில் மத இன பிரிவினைவாதத்தின் பங்கு மேலோங்கி இருப்பதால் ஏற்பட்டுள்ள மிக மோசமான சிக்கல்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இன்றைய சிறார் செத்து மடிவது நியாயமா?

உலக நாடுகள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு …..

அன்று …

இந்திராகாந்தியும் ராஜீவ்காந்தியும் பேராற்றலுடன் அளித்த பேருதவிகளைப் போன்று

இன்று ….

உடனடி உதவிகளை அவசர அவசியம் கருதிச் செய்து அனைத்துலக நாடுகளும் போரை நிறுத்த உரிய நடவடிக்கை எடுத்து உலக அமைதியைக் காக்க வேண்டும்.

அதுவே நம் அனைவரின் அவா ,கோரிக்கை , வேண்டுகோள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *