செய்திகள்

மத்திய பிரதேச விலங்குகள் பூங்காவில் இருந்து சிவிங்கிப் புலி தப்பியோட்டம்

இந்தூர், ஏப். 3–

மத்தியபிரதேச மாநிலம் குனோ பூங்காவில் இருந்து சிவிங்கிப் புலி ஒன்று தப்பியோடியது.

இந்தியாவில் சிவிங்கி புலிகள் இனம் அழிந்து விட்ட நிலையில், இந்திய மண்ணில் சிவிங்கி புலி இனத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டது. அதன் முதற்கட்டமாக நமீபியாவில் 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன.

தப்பிய சிவிங்கிப் புலி

அதனைதொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து, 12 சிவிங்கி புலிகளும் இதே பூங்காவில் விடப்பட்டது. இதில், நான்கரை வயது பெண் சிவங்கிப்புலி சாஷா சிறுநீரகக்கோளாறால் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இந்த நிலையில், சியாயா என்ற பெண் சிவிங்கி புலி 4 குட்டிகளை ஈன்றது.

இந்த நிலையில், சிவங்கிப்புலி ஒன்று பூங்காவில் இருந்து தப்பியோடியது. குனோ பூங்காவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சிவங்கிப்புலி சுற்றித்திரிவது தெரியவந்துள்ளது. சிவங்கிப்புலியின் கழுத்துப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கண்காணிப்பு சாதனம் மூலம் அதை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *