செய்திகள்

மத்திய பிரதேச மாநிலத்தின் எம்பி ஆகிறார் எல்.முருகன்

போபால், செப். 18–

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தேர்வாகிறார்.

மத்திய இணை அமைச்சராக உள்ள எல். முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார். அண்மையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்தபோது, தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ம.பி. எம்.பி.யாக முருகன்

இந்த நிலையில், ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், தற்போது மத்திய பிரதேச மாநிலங்களவை எம்பியாக தேர்வாக உள்ளார். அதன்படி, மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *