செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 30 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று

இந்தூர், செப். 25–

மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 30 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தொடர்ந்து ஆங்காங்கே பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் முன்கள பணியாளராக பணியாற்ற கூடிய மருத்துவர்கள், காவலர்கள், ராணுவ வீரர்கள் பலருக்கும் கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள 30 ராணுவ வீரர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

30 ராணுவ வீரர்கள்

இது தொடர்பாக மத்திய பிரதேச உள்ளாட்சித் துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 36 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ராணுவ வீரர்கள் 30 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவருமே தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *