செய்திகள்

மத்திய பிரதேசத்தில் இன்று அதிகாலை கார் -பேருந்து நேருக்கு நேர் மோதல்: 2 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி

பிரதமர் மோடி, முதலமைச்சர் சிவராஜ் சவுகான் இரங்கல்

போபால், நவ. 4–

மத்திய பிரதேச மாநிலத்தில் பெதில் அருகே பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் போபால் மாவட்டத்தில் இருக்கும் பெதுல் எனும் இடத்தில் அதிகாலையில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். காரில் இருந்த 5 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று 11 பேர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும், காயம் அடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

ரூ.4 லட்சம் நிவாரண நிதி

11 தொழிலாளர்கள் மராட்டியத்தின் அமராவதியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது குட்கான் மற்றும் பைஸ்தேஹி இடையே ஜல்லார் காவல் நிலையம் அருகே அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து பெதில் உயர்காவல் அதிகாரி சிம்லா பிரசாத் கூறுகையில், அதிகாலை 2:00 மணி அளவில் கார்–பேருந்து மோதிக்கொண்ட விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10000 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதுடன், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *