தலையங்கம்
மத்திய கிழக்கில் பதற்றம் இன்னும் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்புகள் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக், லெபனான் மீதான தாக்குதலை தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என தெரிவித்தார்.
கடந்த வாரம், ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவத் தளங்களை குறிவைத்து சுமார் 300 ஏவுகனைகளை ஏவியதாக கூறியது. இதற்கு பதிலளிக்கவே இஸ்ரேல், லெபனான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியது. தெற்கு லெபனான் பகுதிகளில் ஹெஸ்பொல்லா ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்கவே இஸ்ரேல் முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுத்ததாக தெரிவிக்கின்றது.
இதனால், மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையிலான இந்த மோதல், மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளின் தூண்டல்களால் மேலும் தீவிரமாகலாம் என அஞ்சப்படுகிறது.
நிலமை இப்படி இருக்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், மத்திய கிழக்கில் ஒரு வெளிப்புற அணுகுமுறையை முன்னெடுத்து செயல்படுகிறார். இதற்காக, அவர் இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவை இயல்பாக்கி, இஸ்ரேல்-யுஏஇ மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த முயல்கிறார். பொருளாதார வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுத்து, பாலஸ்தீனிய பிரச்சனை மறைந்துவிடும் அல்லது குறைக்கப்படும் என அவர் நம்புகிறார்.
இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையிலான இந்த மோதல், மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளின் தூண்டல்களால் மேலும் தீவிரமாகலாம் என அஞ்சப்படுகிறது.
காசா மற்றும் லெபனானுடனான எல்லைகளில் தொடர்ந்த தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல், தனது குடிமக்களையும் பிராந்தியத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மத்திய கிழக்கில் பெரிய அளவிலான போரை விரும்பவில்லை என இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், காசா பகுதியில் உள்ள போரால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. இதனால், உலகளவில் போர் நிறுத்தம் குறித்த கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த மிகுந்த பதற்றம், உலக அமைதிக்கு பெரிய சவாலாக மாறியுள்ளதுடன், இது அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகியவற்றையும் உள்ளிழுக்கும் ஆபத்தை உருவாக்கியுள்ளது.
இருதரப்பும் ஒரு முழு அளவிலான போரை விரும்பவில்லை ஏனென்றால் அது இரான் மற்றும் அமெரிக்காவை உள்ளிழுக்கும் ஆபத்தை கொண்டுள்ளது.
கிழக்கில் ஜோர்டான் நதி, மேகில் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது மேற்குக் கரை. பாலத்தீன மத்திய தரவுகள் அமைப்பின் தகவல்கள் படி சுமார் 32 லட்சம் மக்கள் இந்தப் பகுதியில் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் பாலத்தீனர்கள். எனினும் பல யூதர்களும் இங்கு உள்ளனர். சர்வதேச சட்டத்துக்கு விரோதமான குடியிருப்புகளில் அவர்கள் வசிக்கின்றனர். மேற்குக் கரையின் ஆக்கிரமிக்கப்பட்டப் பகுதியில், ஜெனின், துல்காம், நப்லுஸ், துபஸ் ஆகிய நான்கு பாலத்தீன நகரங்களையும் அருகில் உள்ள அகதிகள் முகாம்களையும் இஸ்ரேலியப் படைகள் ஒரே நேரத்தில் தாக்கி வருகின்றது.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் போரால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,000ஐ கடந்திருக்கிறது. இதனையடுத்து போர் நிறுத்தம் குறித்த கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.