செய்திகள்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

Spread the love

சென்னை, செப். 12–

ஜி.எஸ்.டி.யில் சினிமாவுக்கு சலுகை வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் எஸ்.வி.சேகர், ஜே.எஸ்.கே. சதீஷ், கே. ராஜன், தனஞ்செயன், டி.சிவா, தியாகராஜன், சுரேஷ் காமாட்சி மற்றும் சிவசக்தி பாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, சினிமா துறை வளர்ச்சிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இது குறித்து, திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்து தியேட்டர்களில், ‘ஆன்லைன்’ டிக்கெட் பதிவு செய்ய, உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.

சினிமாவுக்கான, ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், சில சலுகைகள் வேண்டும்; டிக்கெட் விற்பனையின்போதே, ஜி.எஸ்.டி.,க்கான தொகை, நேரடியாக, ஜி.எஸ்.டி., கணக்கில் சேர வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். மேலும், தயாரிப்பாளர்கள், டெல்லிக்கு வந்து, சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பேசினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *