செய்திகள்

மத்தியில் ஆளும் பாஜகவை கண்டித்து கேரளாவில் இன்று 13வது நாளாக ராகுல் காந்தி நடை பயணம்

திருவனந்தபுரம், செப்.20–

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று 13-வது நாளாக தொண்டர்களுடன், ஆலப்புழா மாவட்டத்தில் நடை பயணத்தை தொடங்கினார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளர். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ராகுல் காந்தியின் நடை பயணம் இன்று 13-வது நாளாக நடைபெற்று வருகிறது. ஆலப்புழா மாவட்டத்தில் நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆலப்புழை மாவட்டம் வடக்கல் கடற்கரையில் மீனவா்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினாா்.

கேரளாவில் ராகுல் காந்தியின் நடை பயணம் நேற்று 12-வது நாளாக நீடித்தது. ஆலப்புழா மாவட்டம் புன்னப்ராவில் இன்று காலை நடை பயணத்தை தொடங்கிய அவா், 16 கி.மீ. கடந்து களவூரில் நிறைவு செய்தாா். பின்னா், மாலை 4.30 மணியளவில் மீண்டும் நடை பயணத்தை தொடங்கி, 9 கி.மீ. கடந்து சோ்தலா அருகே உள்ள மயித்தாரா பகுதியில் நடை பயணத்தை முடித்துக் கொண்டாா்.

இந்நிலையில் இன்று ஆலப்புழா மாவட்டத்தில் நடை பயணத்தை துவங்கி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *