ஜெனீவா, ஜூன் 27–
உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
32 லட்சம் பேர் பலி
உலகம் முழுவதம் மது அருந்துவதால் மட்டும் 26 லட்சம் பேரும், போதை பொருட்களால் 6 லட்சம் மக்களும் இறக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். குறைந்த வருமானம் கிடைக்கும் நாடுகளில் அதிகமான மக்கள் மதுவினால் உயிரிழக்கின்றனர்.
அதிக வருமானம் கிடைக்கும் நாடுகளில் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது. 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.