செய்திகள்

மதுரை ரெயில் நிலையத்தில் மாரடைப்பை சீராக்கும் தானியங்கி கருவி

Spread the love

மதுரை,ஜூலை.10–

மதுரை வேலம்மாள் மருத்துவமனை ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் சார்பில் மதுரை ரெயில்வே நிலைய 1–வது பிளாட்பாரத்தில் டிபிப்ரிலேட்டர் என்னும் மாரடைப்பால் நின்று போன இதய துடிப்பை சீராக்கும் தானியங்கி கருவி வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை வேலம்மாள் மருத்துவமனை இருதயவியல் துறையின் இயக்குநர் மற்றும் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேசன் நிறுவனருமான டாக்டர் ஏ.மாதவன் தானியங்கி கருவியை ரெயில்வே நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைத்தார். இதற்கான நிகழ்ச்சி ரெயில் நிலையத்தின் 1–வது பிளாட்பாரத்தில் நடைபெற்றது.

மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் ஓ.பி.ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோட்ட தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சாகு முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் ரெயில்வே நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படும் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு நேரிடாமல் பாதுகாக்கும் முதலுதவி சிகிச்சைகான ஏ.இ.டி. கருவி ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டது. முடிவில் ரெயில் நிலைய இயக்குநர் சச்சின் குமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், சப் – இன்ஸ்பெக்டர் பத்மாகர், தமிழக ரெயில்வே போலீஸ் தனிப்பிரிவு சப் – இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மிகச்சிறிய தானியங்கி கருவி விபத்து போன்ற அவசர நேரங்களில் டாக்டர்களுக்கு உதவியாக இருக்கும். முன்பெல்லாம் இக்கருவியை மருத்துவ பயிற்சி பெற்றவர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது சாதாரண மக்கள் கூட சிறிய பயிற்சிக்கு பின் பயன்படுத்தலாம். கருவியில் உள்ள பட்டைகளை பாதிக்கப்பட்டவரின் இருதய பகுதியில் வைத்து அழுத்தும் போது இதயத் துடிப்பு சீராகும். சீராகவில்லை என்றால் அதற்கேற்ப மின் அதிர்ச்சி கொடுத்து சீராக்கலாம். இதன்மூலம் நின்று போன இதயத்தை இயங்க வைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *