செய்திகள்

மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 502 பேரிடம் மொத்தம் ரூ. 60 ஆயிரம் அபராதம்

மதுரை, மே.21–

மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 502 பேர்களிடம் இருந்து 59,800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் கோவிட்–19 தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிட்–19 காரணமாக ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் பொது இடங்கள் மற்றும் பணி புரியும் இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் சென்ற மதுரை நகர்ப்புறத்தைச் சேர்ந்த 447 நபர்களுக்கும் ஊரகப்பகுதியைச் சேர்ந்த 55 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு அபராதத் தொகை ரூ.59,800– வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தாங்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும். பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது. எச்சில் துப்புவது தண்டனை வழங்க தக்க மற்றும் அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும் என்று மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *