செய்திகள்

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 816 பேரிடம் ரூ.83 ஆயிரம் அபராதம்

Spread the love

மதுரை,மே.23–

வெளியிடங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் முக கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து வசூலிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் வினய் எச்சரித்துள்ளார். இதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் 816 பேரிடம் 83 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் 259 பேரும் நகராட்சியில் 73 பேரும் பேரூராட்சியில் 467 பேரும் கிராம பஞ்சாயத்துகளில் 17 பேரிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *