செய்திகள்

மதுரை மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

மதுரை, பிப். 10–

மதுரை மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.90–க்கு விற்பனை செய்யப்பட்டது.

மதுரை மார்க்கெட்டுக்கு கர்நாடகம், மராட்டியம் , மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

மதுரை மாவட்டத்தின் சில பகுதிகள் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிலேயே பாதிப்புக்குள்ளானது. அதனை தொடர்ந்து மதுரை மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்தது. இந்த நிலையில் மதுரை வெங்காய மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் நேற்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விலையில் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் கடந்த வாரம் ஒரு கிலோ 60 ரூபாய் வரை விற்பனையானது.

மேலும் பெரிய வெங்காயம் கிலோ 45–க்கு நேற்று விற்பனையானது. அதாவது வரத்து அதிகரிப்பால் கிலோ 100 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயம் விலை குறைந்து விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *