வர்த்தகம்

மதுரை மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தில் சட்டரீதியாகப் பெறப்பட்ட தங்ககட்டிகளை வாங்க வாய்ப்பு

மதுரை, பிப்.9–

சட்டரீதியாகப் பெறப்பட்ட தங்கக் கட்டிகள் விற்க மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கச் சுரங்கங்களிலிருந்து நம்பகமான முறையில் பெறப்பட்ட உயர்தரமான தங்கக் கட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு விற்கும் செய்முறையை மலபார் குழுமத்தின் முதன்மை நிறுவனமான மலபார் கோல்டு-டைமண்ட்ஸ் ஏற்படுத்தியுள்ளது.

சங்கிலித்தொடர் தொழில்நுட்பத்தின் மூலம் தங்க வர்த்தகர்களுக்கு தங்கத்தை வாங்குவதும் அதில் முதலீடு செய்வதும் சுலபமான, ஒளிவுமறையற்ற ஒரு நிகழ்வாக இதன் மூலம் ஆகிவிட்டன.

தரச்சான்றிதழ் பெற்ற லண்டன் குட் டெலிவரி தங்கக் கட்டிகள், துபாய் குட் டெலிவரி தங்கக்கட்டிகள் மற்றும் பிஐஎஸ் ஹால்மார்க் குறியீடு கொண்ட தங்கக் கட்டிகளை மலபார் கோல்டு-டைமண்ட்ஸில் சிறந்த விலையில் எளிய முறையில் வாங்கும்படி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100 கிராம், 1000 கிராம் எடைகளில் தங்கக்கட்டிகளை வாங்கிக் கொள்ளலாம். மலபார் கோல்டு புல்லியன் செயலியைப் பதிவிறக்கம் செய்தால் தங்கத்தின் விலையில் நிகழும் ஏற்ற, இறக்கங்கள் பற்றி வாங்குபவர் தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்கக்கட்டிகள் வாங்கும் செய்முறையை அவரால் திட்டமிட முடியும். கேஒய்சி செய்முறைகள் முடிந்தபின் வாங்குபவர் தமக்குத் தேவையான அளவு தங்கத்தை முன்பதிவு செய்து கீகூஎகு பணப்பரிமாற்றத்தின் மூலம் தங்கத்திற்கான தொகையைச் செலுத்தலாம். காப்பீடு வசதியும் தரப்படும் இத்தங்கக்கட்டிகள் வாங்குபவரின் முகவரிக்கு குரியர் மூலம் முடிந்தவரை சீக்கிரம் அனுப்பி வைக்கப்படும். தங்கக்கட்டிகளை வாங்க விரும்புபவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் மலபார் கோல்டு-டைமண்ட்ஸின் புல்லியன் டெஸ்க்கை 99611 74999 (உட்புற இணைப்பு: 4272, 4291) எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு வேலையை முடிக்கலாம்.

சட்டவிரோதமான முறையில் அதிகளவு தங்கமானது நாட்டுக்குள் கடத்தல் செய்யப்பட்டு பரவலான முறையில் விற்பனையும் செய்யப்படுகின்றது. தங்கம் எங்கிருந்து பெறப்படுகிறது என்பது தெரியாமல் வர்த்தகர்கள், நகை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரியாமலே இந்த நெட்வொர்க்குக்குள் கவரப்படுகின்றனர். தங்கம் வாங்கும் செய்முறை மேலும் மேலும் கடினமாக ஆகிவருகிறது. மேலும் வங்கிகள் மற்றும் பிற ஆதாரங்கள் மூலம் தங்கம் வாங்குவதால் பல்வேறு தொழில்நுட்பப் பிரசினைகளும் எழலாம். இத்தகைய பிரசினைகள் இன்றி ஒளிவுமறைவற்ற வகையில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பை மலபார் கோல்டு- அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ஏற்படுத்தித் தருகிறது,” என்கிறார் மலபார் குழுமத்தின் சேர்மன் எம்.பி. அகமது.

அதிகாரபூர்வ ஆதாரங்கள் மூலம் பொறுப்பான விதத்தில் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)போன்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் பெறப்பட்ட தங்கத்தை மலபார் கோல்டு-டைமண்ட்ஸ் நிறுவனமானது விற்று வருகிறது. நிறுவனமானது தன் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பத்து முக்கிய வாக்குறுதிகளுள் பொறுப்பான ஆதாரத்தின் மூலம் தங்கம் பெறப்படுவதும் அடங்கும். எமது வாடிக்கையார்களும் தங்கநகை உற்பத்தியாளர்களும் அதிகாரபூர்வமான ஆதாரங்கள் மூலம் தங்கத்தை வாங்கினால், அவ்வகைத் தங்கத்தை என்றும் சேமித்து வைக்கலாம், வேறு இடத்துக்கு அனுப்பலாம், தரலாம்; மேலும் தேவை வரும்போது விற்கவும் செய்யலாம்,” என்கிறார் சேர்மன் எம்.பி. அகமது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *