செய்திகள்

மதுரை போலீ­சார் எல்.இ­.டி திரை மூலம் கொரோனா விழிப்­பு­ணர்­வு

Spread the love

மதுரை மார்ச் 29–

மது­ரையில் எல்.இ.டி திரை பொருத்­தப்­பட்ட வாக­னங்கள் மூலம் கொரோனா தடுப்­பது குறித்து விழிப்­பு­ணர்வை பொது­மக்­க­ளுக்கு மாநகர் போலீஸார் ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதி­க­ரிப்பு பொது­மக்­க­ளி­டையே பெரும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. இதனால் பொது­மக்­க­ளி­டையே தேவை­யற்ற அச்சம் நிலவி வரு­கி­றது. இதை போக்கும் வித­மாக தமி­ழக அரசு பல்­வேறு விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை பல்­வேறு துறைகள் மூலம் எடுத்து வரு­கி­ற­து.

அதன் தொடச்­சி­யாக மதுரை மாநகர் போலீஸ் கமிஷ­னர் எஸ்.டேவிட்சன் தேவா­சீர்­வாதம் உத்­த­ரவின் பேரில்­ எல்.இ.டி திரை பொருத்­தப்­பட்ட 2 வாக­னங்கள் மூலம் காவல்­து­றை­யினர் பொது­மக்­க­ளுக்கு விழிப்­­பு­ணர்வு ஏற்படுத்தி வரு­கின்­றனர். இந்த வாக­னங்கள் முக்­கிய இடங்­களில் நிறுத்தி வைக்கப்­பட்டு, ஊர­டங்கு உத்­த­ரவை மீறி வரு­ப­வர்­க­ளுக்கு, கொரோனா தடுப்­பது குறித்து திரை­யு­லக நடி­கர்கள் நடித்த வீடியோ பதிவை காண்பிக்கின்ற­னர். அதில், கை கழு­­வு­வது, இடைவெளி விட்டு நிற்­பது, தேவையற்ற பய­ணத்தை தவிர்ப்­பது, கொரோ­னாவில் இருந்து தற்­காத்து கொள்­வது குறி­த்து விளக்­கப்­ப­டு­கி­றது. இதே போன்று காய்­கனி சந்தை, உழவர் சந்தை பகு­தி­க­ளிலும் இந்த வாக­னங்கள் நிறுத்­தப்­பட்டு விழிப்­­பு­ணர்வு பிரச்­சாரம் செய்­யப்­ப­டு­கி­ற­­து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *