செய்திகள்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக மீனவர் அணி செயலாளராக பள்ளபட்டி முருகேசன் நியமனம்

மதுரை, ஆக, 01–

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. மீனவர் அணி செயலாளராக பள்ளபட்டி முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, அண்ணா தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கரு.முருகேசன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளராக நியமனம் செய்து அறிவித்துள்ளனர்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. மீனவர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பள்ளபட்டி முருகேசன் 2005–ம் ஆண்டு முதல் அண்ணா தி.மு.க. தொண்டராக பணியாற்றி வருகிறார். அதனைத்தொடர்ந்து

2006–ம் ஆண்டு நடந்த பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இவரது மனைவி வள்ளி மயில் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவர் ஆனார். 2011–ம் ஆண்டு நடந்த பள்ளபட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட்டு முருகேசன் அமோக வெற்றி பெற்றார். 2020–ம் ஆண்டு நடந்த பள்ளபட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அண்ணா தி.மு.க. சார்பில் இவரது மனைவி வள்ளிமயில் முருகேசன் அதிக வாக்குகள் பெற்று ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றார். 2020–ம் ஆண்டு நடைபெற்ற பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கரு.முருகேசன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றர். அதனை தொடர்ந்து கொட்டாம்பட்டி ஒன்றியத்தின் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பாவை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தி.மு.க மீனவர் அணி செயலாளர் பள்ளபட்டி முருகேசன் சந்தித்து வாழ்த்து பெற்றார். மற்றும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்களும் பள்ளபட்டி முருகேசனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *