செய்திகள்

மதுரை குறவன்குளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப்பொருட்கள்

Spread the love

அலங்காநல்லூர்,மே,23–

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு கோமாதா பெண்கள் கூட்டமைப்பு சார்பாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி, முக கவசம் அணிந்து வந்தனர். இதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க கூடுதல் இயக்குனர் பிரபாகரன் தலைமை தாங்கி வழங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் தனபால், இளநிலை உதவியாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வரி தண்டலர் கண்ணன், சமுதாய அமைப்பாளர்கள் பிச்சை, பிரபு, மற்றும் பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சமுக இடைவெளியை பின்பற்றுவது பற்றியும் முக கவசம் அணிவது பற்றியும் கபசுர குடிநீர் பருகுவதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *