போஸ்டர் செய்தி

மதுரை அருகே தென்னந்தோப்பில் மர்மாக இறந்து கிடந்த 80 மயில்கள்

மதுரை,ஆக.4–

மதுரை அருகே தென்னத்தோப்பில் 80–க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மாக இறந்து கிடந்தன. இந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரையை அடுத்த உத்தங்குடி கால்வாய் அருகே மருதங்குளம் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இங்கு தென்னத்தோப்புகள், நஞ்சை நிலங்கள் ஏராளமாக உள்ளன. இப்பகுதிகளுக்கு இரை தேடி ஏராளமான மயில்கள், பறவைகள், காடை உள்ளிட்ட பறவை இனங்கள் வருகின்றன. இந்நிலையில் இன்று வழக்கம் போல் அந்த வழியாக வந்த ஒருவர் தோப்பில் ஏராளமான மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரின் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அந்த பகுதியில் அங்காங்கே 80–க்கும் மேற்பட்ட மயில்கள், காடைகள், சில பறவைகள் இறந்து கிடந்தன. அதன் அருகே நெல் தானியங்களும் சிதறிக் கிடந்தன. அந்த நெல்லை வனத்துறையினர் சேகரித்து அதில் விஷம் கலந்து இருக்கலாமா என்பது குறித்தும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய பறவையான மயில்கள் இன்று மதுரை அருகே 80–க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *