வர்த்தகம்

மதுரை அப்போலோ மருத்துவமனையில் கை அச்சிடும் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை, பிப்.10–

புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையில் விழிப்புணர்வுக்காக கை அச்சிடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

வருடந்தோறும் பிப்ரவரி 4–ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வையும் கல்வியையும் வளர்ப்பதற்காக “கை அச்சிடும் பிரச்சாரம்” ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் புற்றுநோயையும் கோவிட்–19 இரண்டையும் ஒன்றாகக் கடந்து வந்ததற்காக ஒருவருக்கொருவர் தங்கள் ஆதரவையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக சுவரில் தங்கள் உள்ளங்கைகளை பதித்தனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஏறக்குறைய 7,80,000 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். இருதய நோய்களுக்குப் பிறகு மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணியாக இந்த புற்றுநோய் இருக்கிறது. இந்த விழிப்புணர்வு திட்டம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் கல்வியையும் உயர்த்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான தடுக்கக்கூடிய இறப்புகளை காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விழிப்புணர்வு திட்டத்தில் அப்போலோ மருத்துவமனை, மதுரை பிரிவின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரோகிணி ஸ்ரீதர், மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஸ்ரீதர், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர்.பாலு மகேந்திரா ஆகியோர் இணைந்து, புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சுவரில் தங்களின் கைத்தடங்களை பதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *