செய்திகள்

மதுரையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

மதுரை, மார்ச்.10–

மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கலெக்டர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி :–

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மகாராஷ்டிரம், கேரளம் பேன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று இண்டாம் அலை பரவி வருகிறத. எனவே தமிழ்கத்தில் இ.பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் மெத்தனப்போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா இரண்டாம் நிலை பரவ வாய்ப்புள்ளது என்று மருத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். மேலும் கண்டிப்பாக கூட்டம் கூடக் கூடாது. கூட்டமான இடங்களுக்குச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது ரூ.200 அபராதம் விதிக்க சுகாதாரத் துறை, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *