செய்திகள்

மதுரையில் சுமை தூக்கும் 400 தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

Spread the love

மதுரையில் சுமை தூக்கும்  400 தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்

எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

 

மதுரை,மே.23–

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட முனிச்சாலை பகுதியில் வசிக்கும் எம்.ஜி.ஆர். சுமைதூக்கும் 400 தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு பையினை மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையில் கூலித் தொழிலாளர்கள், நெசவாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க தமிழ் நாடு முழுவதும் அண்ணா தி.மு.க. சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும் சிறிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்கு மாநகராட்சி. நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி அதிகாரிகள் மற்றும் இந்நிலையில் பணியாளர்களின் மூலம் சாலைகளில் கிருமி நாசினி, சாலை ஓரங்களில் குளோரின் பவுடர் தெளித்து பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர். மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் முனிச்சாலை பகுதியில் வாழும் எம்.ஜி.ஆர் சுமை தூக்குவோர் 400 பேருக்கு மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எஸ்.எஸ்.சரவணன் அரிசி காய்கறி தொகுப்பு பையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் முத்து இருளாண்டி, மாரிச்சாமி, நந்தா மற்றும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *