செய்திகள்

மதுரவாயல் மார்க்கசகாயேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.22 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

சென்னை, செப். 28–

மதுரவாயல் அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 22 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி நேற்று சென்னை மதுரவாயல் அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமித்து உள்வாடகைக்கு விட்டு சட்டத்திற்கு புறம்பாக அனுபவித்து வந்த நபர்கள் மீது வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 ஆயிரத்து 512 சதுரடி பரப்பளவில் உள்ள 4 ஆக்கிரமிப்பு மனைகளில் உள்ள மொத்த 7 கடைகள் மற்றும் காலியாக இருந்த ஒரு கட்டிடம் ஆகியவற்றை இலாகா முத்திரையிட்டு சுமார் 22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது சென்னை மண்டல உதவி ஆணையர் பெ.க.கவெனிதா, காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ்பாபு, மதுரவாயல் வருவாய் துறை வட்டாசியர், மின்சார வாரிய உதவி பொறியாளர், செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *