சிறுகதை

மதிப்பு – ராஜா செல்லமுத்து

சில நாட்களாக கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. நல்லது கெட்டது என்று எல்லாவற்றிற்கும் மழை இடையூறாக இருந்தது.

திருவிழாக்காலங்களில் வெறிச்சோடிக் கிடந்தன வீதிகள். அப்போது குணசீலனின் அப்பா தவறி இருந்தார். அந்த மழை நாளில் யாரும் இறப்பை விசாரிக்க அதில் துக்கம் கொள்ளவும் பெரும்பாலானவர்கள் வரவில்லை. ரத்த உறவுகள் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.

குணசீலனின் ஊர் ஒரு முற்றிய கிராமம். சில வீடுகளைத் தவிர வேறு அங்கு அடிப்படை வசதிகள் ஒன்று கூட இல்லை. வெள்ளம் வந்தால் விலகிப் போவதற்கு தண்ணீர், தந்த வலியை போக்குவதற்கும் அங்கு இடம் ஏதுமில்லை.

குணசீலன் தன் அப்பாவைப் புதைக்க வேண்டும் என்றான். அதற்கு தண்ணீர் ஓடும் இரண்டு ஓடைகளை கடந்தாக வேண்டும். அப்படி ஓடைகளை கடந்தால்தான் சுடுகாடு வரும். சுடுகாடு வந்தால்தான் புதைக்க முடியும். இந்த இக்கட்டான சூழலில் குணசீலன் உறவுகள் தள்ளப்பட்டார்கள்.

இரண்டு நாள் மழை பொழிந்தது. ஓய்ந்திருந்த நேரம் பார்த்து அவர் இறந்த நேரம். அவரை அடக்கம் செய்வதற்கு தூக்கி போனான். எதிர்பாராதவிதமாக ஓடைத் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது .

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்கள் உறவுகள். எப்படியும் தண்ணீர் வற்றுவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும். தண்ணீரில் இறங்கினால் நாமும் தண்ணியோட போக வேண்டியதுதான் என்று நினைத்தனர் குணசீலன் மற்றும் உறவுகள்.

அந்த ஊரில் அருகிலிருந்த வீட்டுக்கு சென்று,. அங்கே கார்த்தியைப் பார்த்த குணசீலன் தண்ணீர் கொஞ்சம் வற்றி விடும் எப்படியாவது தன்னுடைய அப்பாவின் சடலத்தை இரண்டொரு நாட்கள் தன் நண்பர் கார்த்திக் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அதன்படியே கார்த்திக்கிடம் பேசினான்.

என்ன?…., என்ன குணசீலன் அப்பாவுக்கு இப்பிடி ஆயிடுச்சு என்று துக்கம் விசாரித்தான்.

ஆமா வேற வழி தெரியல. அத்தையும் கடந்து பிணத்த இப்ப புதைக்கிறது சாத்தியமல்ல. அதனால நீ ஒரு உதவி செய்ய முடியுமா ?என்று கார்த்திக்கிடம் கேட்டான் குணசீலன் .

என்ன சொல்லு என்றான் கார்த்திக்.

அப்பாவோட டெட் பாடி இரண்டு நாளைக்கு இங்கே வீட்டில் இருக்கலாமா? என்று கேட்டபோது

பதறியடித்து கார்த்தி

ஐயோ ஐயோ அதெல்லாம் வேணாம் . சின்ன குழந்தைங்க இருக்காங்க. பயந்துருவாங்க முடியாது என்று ஒரேயடியாக மறுத்தான்.

சரி பரவால்ல. சும்மா கேட்டு பார்த்தேன் என்றான். அவன் அப்படி மறுத்தது அவன் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தியது .

முன்பொரு நாள் அவன் போட்டிருந்த செருப்பு பிய்ந்து போனதால் அதே கார்த்திக்கின் வீட்டில் அந்த செருப்பை விட்டுவிடலாமா? புது செருப்பு வாங்கிய பிறகு இந்த செருப்பை எடுத்துக் கொள்கிறேன். இந்த செருப்பு கிடக்கட்டும் என்று சொன்னபோது கார்த்தி எதுவுமே சொல்லவில்லையே.

பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து தான் அந்தச் செருப்பை நாம் எடுத்தோம்.

அதுவரை அந்தச் செருப்பு அங்கேயே கிடந்தது .

ஆனால் இந்த மனிதன் தன் உடலில் இருந்த உயிர் பிரிந்த பிறகு பிணமாகி விடுகிறான்.

அந்த உடலை உயிரோடு இருக்கும்போது அப்பா அப்பா என்று கூப்பிட்ட கார்த்தி உடலிலிருந்து உயிர் பிரிந்த பிறகு பிணம் என்று பெயர் வந்த பிறகு அதை ஒரு மணி நேரம் கூட தன் வீட்டில் வைக்க சம்மதிக்கவில்லை.

இதுதான் மனிதனுடைய வாழ்க்கை. பணம், பொருள், எது செய்தாலும் ஒரு மனிதன் தன்னுடைய மூச்சுக்காற்று நின்றால் அவனை இந்த உலகம் ஒருபோதும் மதிக்காது என்று உணர்ந்தான் குணசீலன்.

அப்பாவை எப்படியாவது புதைத்து விட வேண்டும் என்றும் என் மனதில் மனிதர்களின் பற்றிய மதிப்பீடு அவன் மனதில் வந்து போய்க்கொண்டிருந்தது.

எதிரிலிருக்கும் பாடையில் குணசீலன் அப்பா ரொம்பவே ஒய்யாரமாக படுத்திருந்தார்.

எவ்வளவு பெரிய மனிதர் என் தந்தை அரசாங்க வேலை பார்த்தவர் . கை நிறைய சம்பளம் ,சொத்து , சுகம் அத்தனையும் இருக்கிறது. இது அத்தனையும் அவர் இறந்த பிறகு அவர் கூடவோ அல்லது அவரின் கௌரவத்தையும் பறைசாற்ற முடியவில்லை.

இதுதான் மனிதர்களுக்கும் குறைந்தபட்சம் செருப்புக்கு முள்ள மரியாதை என்று உணர்ந்து கொண்டான் குணசீலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *