வாழ்வியல்

மண்புழு உரம், இயற்கை உரம் பயன்படுத்தி வளம் பெறலாம்!

இந்தியாவில் விவசாயிகள் அதிக விளைச்சல் வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு அதிக ரசாயன உரங்களை போடுகின்றனர். பயிர் அதிக பச்சையாய் வளர்ந்து, தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை ஈர்க்கும். தொடர்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மண்ணின் தன்மை மாறும். நன்மை தரும் பூச்சிகளும், நுண் உயிரிகள் அழிக்கப்படும்.

உற்பத்தியாகும் கீரைகள், காய்கள், பழங்கள், நச்சுத் தன்மையடையும். எனவே மனிதனுக்கும் கால்நடைக்கும், ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் கேடு விளைவிக்கின்றன. ஆனால் மண்புழுக்கள் உழாத நிலங்களில் கூட, உழும் ஏராக செயல்பட்டு மண்ணைப் பதப்படுத்துகின்றன. எனவே, மண்புழு உரத்தைப் போட்டால், மல்பெரி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 400–500 கிலோ, இலை மகசூல் அதிகரிக்கும். ரசாயன உரத்தை குறைக்கலாம். மண்புழு உரத்தில், தழைச்சத்து, பாக்டிரியாக்கள், ஈரத்தை நிலை நிறுத்தம் திறன், இரும்பு, துத்தநாகம், கிரியா ஊக்கிகள், மண்புழு உள்ளன.

மண்புழு உரம், தொழு உரம் போட்டு, ரசாயன உரங்களை குறைத்தால் ஒரு ஆண்டில், மண்புழுக்கள் நிலம் முழுவதும் பெருகி, நிலம் வளமாகும். மண்புழு உரம் தொடர்ந்து போட்டால் நிலம் வளமாகி மல்பெரி மகசூல் பெருகும்.

முழு விபரம் பெற www.tnau.ac.in,

www.tnsericulture.gov.in, www.vanagam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *