வாழ்வியல்

மண்ணில் விளைந்த உணவு உடல் நலனுக்கு நல்லது!

உலகில் ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்த இயற்கை விளைபொருட்களின் அடிப்படையில் அந்தந்தப் பகுதி மக்களின் உணவுப் பழக்கம் அமைந்திருந்தது.

உயிர் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவையில் இருந்த உணவு சுவை இன்பத்திற்கானதாக அதன் பின்னரே மாறியிருக்கக்கூடும் என்பது பல ஆய்வாளர்களின் கூற்றாகும். நிலத்திற்கு ஏற்ப உணவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மக்கள் உணவு உண்ணுகிறார்கள்.

தங்கள் மண்ணில் விளைந்த பொருட்களைப் பதப்படுத்தி வைத்துக் கொள்ளவும் அதனை சமைக்கவும் பழகிக் கொண்ட பின்னர் அந்தந்தப் பகுதி மக்களின் அடையாளமாகவும் உணவுகள் மாறிவிடுகிறது.

உணவு என்பது ஒரு இனக்குழுவின் செழிப்பின் வசதியின் அடையாளமாகவும் மாறி விட்டிருக்கிறது. அதனால் தான் நதிக்கரைகளில் அதாவது விவசாயம் செய்யத் தகுந்த இடங்களில் நாகரிகம் தோன்றி வளர்ந்துள்ளது.

நிலவியல் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியும் பல்வேறுபட்ட, ஆயிரக்கணக்கான வகையிலான தானியங்களை விளைவிக்கின்றன. அதன் அடிப்படையில் உணவின் வகைகளும் விரிகின்றன.

எனவே நிலத்திற்கு ஏற்ப தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மக்கள் உணவு உண்ணுவதே உடல் நலனுக்கு நல்லது. அதை உணர்ந்தே “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” – என்கிறது புறநானூறு பாடல். அதனால்தான் சங்க கால தமிழர்கள் உணவு முறையில் சிறு தானியங்கள் சிறந்த உணவாக விளங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *