செய்திகள்

மணியாச்சி கிராமத்தில் 300 பேர் தி.மு.க., பா.ம.க.வில் இருந்து விலகி அண்ணா தி.மு.க.வில் இணைந்தனர்

காஞ்சீபுரம், அக். 30-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில், காஞ்சீபுரம் அருகே மணியாச்சி கிராமத்தில், வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அத்திவாக்கம் டாக்டர் செ.ரமேஷ் ஏற்பாட்டின் பேரில் மாற்றுக்கட்சியினர் அண்ணா தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மணியாச்சி கிராமத்தில் தி.மு.க. ஊராட்சி செயலாளர் சீனிவாசன் தலைமையில் 100 தி.மு.க.வினர், வளத்தூர் ஊராட்சியில் ஆனந்தன் தலைமையில் தி.மு.க.வை சேர்ந்த 100 பேர், கொட்டவாக்கத்தில் பா.ம.க., தி.மு.க. கட்சியினர் சுமார் 100 பேரும் அந்தந்த கட்சியில் இருந்து விலகி, காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலை யில் அண்ணா தி.மு.க.வில் “இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாசறை நிர்வாகி திலக்குமார், வர்த்தக பிரிவு செயலாளர் தென்னேரி என்.எம்.வரதராஜூலு, விவசாய பிரிவு செயலாளர் நாயக்கன்குப்பம் என்.ஆர்.பழனி, பட்டு கூட்டுறவு சங்க தலைவர் யுவராஜ் என்கிற துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *