செய்திகள்

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Makkal Kural Official

இம்பால், பிப். 14–

மணிப்பூர் முதல் அமைச்சர் பிரேன் சிங் அண்மையில் ராஜினாமா செய்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக வன்முறை வெடித்து காணப்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள குக்கி மற்றும் மைதேயி ஆகிய 2 சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் ஆகும். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மைதேயி ஆகிய இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக திடீர் மோதல் ஏற்பட்டது. இது நாளடைவில் வன்முறையாக மாறியது. ந்த வன்முறையின்போது ஒருவர், மற்றொருவரின் குடிசைகள் தீ வைத்து எரிப்பது, பெண்களை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளனா். இந்த சம்பவத்தால் மணிப்பூரே தீக்காடாக மாறியது.

ஆனால் பிரதமர் மோடியோ, மணிப்பூர் வன்முறையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ராகுல் காந்தி உள்ளிட்டோர் முயற்சித்தனா். னினும் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வன்முறையை தொடர்ந்து மணிப்பூரில் பல மாதங்களாக இணைய சேவை தடை செய்யப்பட்டது. மேலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்தி ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் படை உள்ளிட்டவை களம் இறக்கப்பட்டது.

அதே சமயம் மணிப்பூர் வன்முறைக்கு தீர்வு காண வேண்டும் என குரல்கள் எழுந்தன. இதற்கிடையே மணிப்பூரில் ஆளும் பாஜக ஆட்சியை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தல்கள் எழுந்தன. எனினும் முதல் அமைச்சர் பிரேன் சிங்கிற்கும், வன்முறைக்கும் தொடர்பு இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து கடந்த 9ந் தேதி திடீரென மணிப்பூர் பாஜக முதல் அமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. துதொடர்பான பரிசீலனைகள் நடந்தன. இந்த நிலையில் மணிப்பூரில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *