செய்திகள்

மணிப்பூரில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக: 31 தொகுதிகளில் முன்னிலை

காங்கிரஸ் – 7; மற்ற கட்சிகள் – 22

இம்பால், மார்ச் 10–

மணிப்பூர் மாநிலத்திலும் பாரதீய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று பாஜக ஆட்சி அமைந்தது. இம்முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் என்ற கருத்துக்கணிப்புகளை உறுதி செய்யும் வகையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 28 மற்றும் கடந்த 5-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தற்போது பைரன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க 31 இடங்கள் தேவைப்படுகிறது.

இங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளும் களத்தில் உள்ளன. 265 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

மணிப்பூரில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. 12 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

பாரதிய ஜனதா 31 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மற்றவை 22 இடங்களில் முன்னிலை வகித்தது.

மணிப்பூரில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க 31 தொகுதிகள் தேவை. அதே நேரத்தில் பா.ஜனதா 31 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published.