வாழ்வியல்

மஞ்சள் காமாலை நோயைக் குணமாக்கும் கரிசலாங்கண்ணிக் கீரை

மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும். ஈரல் வீக்கம் குறையும்; பத்தியம் இருக்க வேண்டும். புளி, காரம் மற்றும் எண்ணெய் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி சாறு 100 மி.லி நல்லெண்ணெய் 100 மி.லி அதிமதுரம் 10 கிராம் போன்றவைகளை சேர்ந்து காய்ச்சி 5 மி.லி வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டால் சளி,இருமல் மற்றும் குரல் கம்மல் குணமாகும். இதனை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும். இந்தக் கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள் பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *