செய்திகள்

மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்

போளூர், ஏப்.16–

மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று போளூரில் வேட்பாளர் செஞ்சி வெ.ழுமலை ஆதரித்து பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்த போது அண்ணா தி.மு.க. மாநில மகளிரணி துனை செயலாளர் எல்.ஜெயசுதா பேசினார்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை ஆதரித்து போளூர் ஒன்றிய கிராமங்களில் திறந்தவெளி ஜீப்பில் மாவட்ட செயாலாளர் தூசி கே. மோகன், மாநில மகளிரணி துனை செயலாளர் எல்.ஜெயசுதாஆகியோர் வசூர் கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கி அதனை தொடர்ந்து குருவிமலை புதுப்பாளையம், காங்கேயனுர், எடப்பிறை, திருசூர், எழுவாம்பாடி, மாம்பட்டு, அத்திமூர், பெரியகரம், பொத்தரை,சந்தவாசல், கேளுர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் ஓட்டு கேட்டனர்.

அப்போது மாநில மகளிரணி துனை செயலாளர் எல்.ஜெயசுதா பேசியதாவது:

நமக்கெல்லாம் வழிகாட்டியாக எம்.ஜி.ஆர். வழியில் அம்மா தமிழகத்தை ஆட்சி செய்தார். ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறைகொண்டு அம்மா அல்லும் பகலும் அயராது உழைத்தார். மக்களுக்காகவே தவ வாழ்வு வாழ்ந்தார். மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி அவற்றை செயல்படுத்தி அழகு பார்த்தார். இத்தகைய உயர்ந்த சிந்தனைகள் உலகத்திலே எந்த தலைவருக்கும் வந்தது இல்லை.

அம்மா வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களின் திட்டங்களை செயலாற்றி வருகின்றனர். வரும் 18–ந் தேதி ஓட்டு சாவடிக்கு சென்றவுடன் முதல் பட்டனை நீங்கள் அனைவரும் அழுத்தினால் செஞ்சி வெ.ஏழுமலை அமோக வெற்றி பெற்று விடுவார். அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை வெற்றி பெற செய்தால் இந்த தொகுதிக்கு தேவையான பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படும். அண்ணா தி.மு..கவை பலபடுத்துவதன் மூலம் தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் மக்களை சென்றடையும். சட்ட ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கும். மக்களின் வாழ்க்கை தரம் உயர பல நல்ல திட்டங்கள் கிடைக்கவும், மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழவும் அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அ.கார்த்திகேயன், ஒன்றிய பொருளாளர் கே.ஜே.கண்ணன், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் ரா.தங்கதுரை, வி.சங்கர், என்.முருகன் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *