செய்திகள்

மகாராஷ்ட்ரா பால்கார் மாவட்டத்தில் பஸ் – கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

மும்பை, ஜன.31–

கார் – பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 4 பேர் பலியானார்கள். இந்த சோக சம்பவம் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நடந்தது.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

குஜராத்தில் இருந்து மும்பை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பால்கார் மாவட்டத்தில் தஹானு பகுதியில் மும்பை – -ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசையில் வந்த சொகுசு பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் அந்த இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இறந்தவர்கள் 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யார் – யார் என்ற விவரம் கிடைக்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *