செய்திகள்

மகாராஷ்டிரா வெள்ளம்: பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு

மும்பை, ஜூலை 27–

மகாராஷ்டிராவில் நீடிக்கும் தொடர் மழையால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு சேவைள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர் மழையால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேரை காணவில்லை. மொத்தமாக 13 மாவட்டங்களில் 1,043 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 259 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *