செய்திகள்

மகாராஷ்டிராவை சூறையாடும் கனமழை: 136 பேர் பரிதாப பலி

மும்பை, ஜூலை 24–

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மழை பாதிப்புகளால் நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தின் ராய்கட், சத்தாரா, காந்தியார், சந்திரபூர், ரத்தனகிரி, பால்கர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

136 பேர் பலி

நேற்று ராய்கட் மாவட்டத்தில் உள்ள தலாய் எனும் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 36 வீடுகள் சரிந்து விழுந்து, நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 40 க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து சதாரா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

10 முதல் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர் கனமழை பெய்து வருவதால், மீட்பு பணியில் சிக்கல் நீடிக்கிறது. மழை தொடரும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மைய,ம் மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளில் சிக்கி நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்திருப்பதாக மறுவாழ்வு துறை அமைச்சர் விஜய் வதேட்டிவார் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்வதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. மகாராஷ்டிராவில் சுமார் 30க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *