செய்திகள்

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 63,000 பேருக்கு தொற்று

மகாராஷ்டிராவில் நேற்று புதிய உச்சமாக 63 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 349 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக தகவல் வேளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த வார இறுதிநாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாநிலத்தில் 63 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 7 ஆயிரத்து 245 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று ஒரே நாளில் 349 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 987 ஆக உயர்ந்து உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 5 லட்சத்து 65 ஆயிரத்து 587 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 லட்சத்து 75 ஆயிரத்து 585 பேர் வீடுகளிலும், 25 ஆயிரத்து 694 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொருளாதார பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலத்தின் பங்கு மட்டுமே 15 சதவீதமாக இருக்கிறது. எனவே அங்கு ஏற்படும் பின்னடைவுகள் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே பாதிக்கும். நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 10.7 சதவீதம் முதல் 10.9 சதவீதம் வரையில் வளர்ச்சியடையும் என்று இக்ரா நிறுவனம் கூறியுள்ளது. இது முந்தைய மதிப்பீட்டை விடக் குறைவுதான். இதற்கு முந்தைய மதிப்பீட்டில் 11.2 சதவீதம் வரையில் வளர்ச்சி இருக்கும் என்று இக்ரா நிறுவனம் கூறியிருந்தது. கொரோனா இரண்டாம் அலையால் இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *